Tamilnadu

ஒத்த ஏவுகனையை வச்சு இம்ரான் கனவை கலையோ கலை என கலைத்து விட்டார்கள்..! என்ன நடந்தது பாருங்கள்!

modi and Dummy Rocket
modi and Dummy Rocket

பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து வாங்கிய J10 வகை விமானங்களை அணிவகுப்பு செய்த நிலையிலும் ராணுவத்தின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்து வரும் சூழலிலும், இந்தியாவில் இருந்து வந்த டம்மி ராக்கெட் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே 124  கிலோ மீட்டர் சென்று விழுந்து இருப்பது இம்ரான் கனவை கலையோ கலை என கலைத்து இருக்கிறது.



இது குறித்து ஆனந்த் ராம் பாஸ்கர் என்பவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-  இந்தியாவின் ராக்கெட் எந்த வகையில் பாக் கினை மிரட்டும் என கேட்பவர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் பாகிஸ்தானை சேர்ந்த எதிர்கட்சிகளால் கொண்டு  வரப்பட்டுள்ளது, பாக் சட்டப்படி 68 MP கள் கையெழுத்திட்டால் போதுமானது ஆனால் 100 MP க்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

பாக் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் பலம் 172 - எதிர் கட்சிகளின் கூட்டணியின் பலம் 160. மீதம் 13 MP களின் ஆதரவு தேவை. தங்களிடம் 200+ MP ஆதரவு இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்லிவருகின்றன.இம்ரான் தனக்கு ராணுவத்தின் முழு ஒத்துழைப்பு இருப்பதால் ஆட்சி கவிழாது அப்படி கவிழ்ந்தால் பயங்கர விளைவுகள் இருக்கும் என மிரட்டல் விடுத்து வந்தார்.


தற்போது - சுமார் 124 கிமி பாக் உள்ள போய் இருக்கு இந்தியாவின் ஏவுகனை...ஏற்கனவே இந்தியா வான் பாதுகாப்புக்கு ரஸ்யாவின் S-400 வாங்கி பாக் எல்லையில் நிப்பாட்டியாச்சு ! அப்ப இருந்தே பாக் தனக்கும் ஒரு வான் பாதுகாப்பு சாதனம் தேவைன்னு உலகநாடுகளிடம் அலைமோதிட்டு இருக்கு.

போன வாரம் ஒரு பொதுக்கூட்டத்தில் இம்ரான் அமெரிக்க & மேற்கு உலகினை இந்தியாவின் பக்கம் மென்மையாகவும் பாக் கிடம் கடுமையாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினார்,  இதை பாக் ராணுவம் ரசிக்கவில்லை ஏன்னா பல இன்னாள் & முன்னாள் ராணுவத்தின் முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் அந்த நாடுகளில் உண்டு.

இப்படி சூழலில் ஒரே ஒரு டம்மி ஏவுகனை பாக் வான்வெளி பாதுகாப்பு இல்லாத சுழலை உலகுக்கு இல்லை, பாக் மக்களுக்கு சொல்லி இருக்கு இந்தியா, இனி ராணுவமும்  எதிர்கட்சிகளும் மத்த வேலையினை பார்த்துக்கொள்ளும்  என குறிப்பிட்டுள்ளார், எதிரி நாட்டு ஏவுகணை 124 கிலோ மீட்டர் தங்கள் நாட்டிற்குள் வருவதை கண்டு பிடிக்காத வான் பாதுகாப்பு சிஸ்டம் அமைப்பை கொண்டுள்ள பாகிஸ்தான் எப்படி இந்தியாவின் மற்ற தாக்குதல்களை சமாளிக்கும் என இப்போதே பல கேள்விகள் எழ தொடங்கியுள்ளன.