தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பாஜக நீடித்து வருகிறது. இந்த கூட்டணிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி என அதிமுக பிளவைக் கண்டபோதும் பாஜகவினருடன் நட்புறவையே மேம்போக்காக காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளை பாஜக கேட்டது. ஆனால், 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக வழங்கியது. ஆனாலும்,இரு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வியை தழுவியது.சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலைதான். எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளது பாஜக.
அதேவேளை 2024 நாடாளுமன்றத் தேர்தலை தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகிறது பாஜக மேலிடம். அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி பிரச்சினைகளால் தங்களை பிரதான எதிர்க்கட்சியாக காட்ட முயற்சித்து வரும் பாஜக, தற்போது உண்மையான எதிர்கட்சி தமிழகத்தில் நாங்கள் தான் மார்தட்டி வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்
இரட்டை இலக்கத்தை பிடித்திட வேண்டும் என களமிறங்கத் தயாராகி வருகிறது.அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டதாகவும், அனைவரும் இணைந்தால் கூட அக்கட்சிக்கு குறைவான வாக்குகளே விழும் என தன்னிடம் இருக்கும் ரிப்போர்ட்டை அமித்ஷா காட்டியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்த்தை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கிறது தமிழக பாஜக. அதற்காக பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு வருகிறது பாஜக. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சியை பிடிக்கும் திட்டமும் பாஜக வசம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி தனியார் யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டி திமுகவினரை அதிர வைத்துள்ளது. அவர் அந்த வீடியோவில், தமிழகத்தில் பாஜகவின் இலக்கு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்தான். அப்போது திமுக ஆட்சியை பிடிக்கமுடியவில்லை என்றால் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதி’’ எனக்கூறியுள்ளார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, அதிமுகவினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.