![vijayakanth](https://www.tnnews24air.com/storage/gallery/E4Mk15fzPE2bcYelBRyZXEabo3ppeOsgZKpOX8cy.jpg)
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி கல்லார் மீனவ கிராமத்தில் மறைந்த தே.மு.தி.க தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்தக்கு மாநகர காவல் ரசிகர் மன்றம் மற்றும் தேமுதிக சார்பில் மீனவ பெண்கள், ஆண்கள் விஜயகாந்தின் திருவுரு படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர் மேலும் அவரது ஒலிபெருக்கி மூலம் இசைத்து அஞ்சலி செலுத்தினர் மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட போது முதல் நபராக உடனடியாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறியதாகவும் மேலும் தங்களது குடும்பத்தில் ஒரு நபரை இழந்ததாகவும் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர் மேலும் மீனவர்களுக்கு பாதுகாவலராக விளங்கியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்