24 special

அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது காலனி வீச்சு?...ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ..!

Vijay
Vijay

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர்கள் மக்கள் பங்கேற்று இரங்கல் தெரிவித்து வந்த நேரத்தில் தளபதி விஜய் அலுவலகம் வந்த பொது அவர் மீது காலனி வீசப்பட்ட சம்பவம் இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.


தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். இந்த சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்தை கான மக்கள் பெருவாரியாக வந்த வண்ணம் உள்ளன. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காரணமாக விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து தற்போது தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜய் சினிமாவில் பெரிய வளர்ச்சிக்கு காரணமாக இருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டு உடல்நலம் பாதிப்பு அடைந்த நேரத்திலும் விஜய் எந்த வித நலமும் விசாரிக்கவில்லை என அவர் மீது விமர்சனம் எழுந்தது. அது மட்டுமில்லாமல் நேற்று விஜய் இறந்த பிறகு மொத்த திரையுலகமும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜய் மட்டும் ஏன் வரவில்லை வளர்ந்து விட்டால் வளர்த்து விட்டவரை கண்டுகொள்ளமாட்டீர்களாக என இணையத்தில் பெரும் சர்ச்சரவு ஏற்பட்டது. விஜய்க்கு பெரியண்ணா படத்தின் மூலம் விஜயை சினிமாவில் மேலே தூக்கிவிட்டவர் விஜயகாந்த். ஏன் விஜய் வரவில்லை என விமர்சனம் தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று இரவு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் தேமுதிக அலுவலகம் வந்தார். விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கியபடி நின்று சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.அப்போது அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் அவரால் தன்னுடைய காருக்கு செல்ல முடியவில்லை. போலீஸார், பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது சிலர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர். 

இருப்பினும் காரை நோக்கி சென்ற விஜய் அப்போது கூட்டத்தில் அடி டா அவனை என்று கத்தினர். பின்பு எங்கிருந்தோ பறந்துவந்து செருப்பு விஜய்யின் கழுத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யார்ஈடுபட்டார்கள் என தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக தலத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு ரசிகர்களும் கண்டமே தெரிவித்து வருகின்றனர். வேண்டுமென்று வீசினார்களா அல்லது தவறுதலாக அவர் மீது வீசப்பட்டதா என்பது தெரியவில்லை,