24 special

விஜயகாந்த் வீழ்த்திய ஊடகங்கள்..... பகிர் தகவல்.....

vijayakanth
vijayakanth

2005 இல் மதுரையில் அரசியலுக்கான அடிக்கல்லை நாட்டி சினிமாவை கிடைத்த வருமானத்தில் மக்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்தோமோ அதே போன்று அரசியலிலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இறங்கிய கேப்டன் விஜயகாந்த் ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்தாலும் பிறகு எதிர்க்கட்சி என்ற ஒரு பொறுப்பை பெற்று மக்களின் நலனே நமது நலன் என்ற நோக்கில் பல உதவிகளை மேற்கொண்டுள்ளார்.இருப்பினும் 2014 லில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவருடன் இணைந்து சில எம்எல்ஏக்கள் வேறு ஒரு கட்சிக்கு மாறியதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் முன்வைத்த சில கருத்துக்கள் சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதற்கான பரிசோதனைகளும் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 


இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து உடல் நலம் தேறி வீடு திரும்பிய விஜயகாந்த் தேமுதிக செயற்குழு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.. இருப்பினும் நேற்றைய தினம் மீண்டும் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனாலும் விஜயகாந்தின் உடல் சிகிச்சைக்கு பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த நிலையில் பத்திரிக்கை துறையை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார், அந்த பதிவில், 'கேப்டன் விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு ஊடகமும் ஒரு காரணம். அப்போது புதிதாக தொடங்கப்பட்ட ஒரு 24/7 செய்தி சேனலில் மதுரை மண்டல செய்தியளராக 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களை கவர் செய்யும் அசைன்மெண்ட்! மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம். 

2016 ஏப்ரல் மாத இறுதியில் விஜயகாந்த் மதுரை, விருதுநகர் மற்றும் தேனியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார். பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு. அப்போதைய அசைன்மெண்ட் எடிட்டரிடமிருந்து ஒரு கால் - "விஜயகாந்தை மட்டும் focus லயே வைச்சிருங்க.என்று அவர் என்ன செஞ்சாலும் என்ன பேசினாலும் record பண்ணுங்க. முடிஞ்சா லைவ் connect பண்ணுங்க நாங்க இங்க record போட்டுக்கறோம்" மறு நாள் மாலையிலிருந்து விஜயகாந்தின் ஓவ்வொரு பிரச்சார பாயிண்டையும் கவர்செய்து கொண்டு சென்றேன். அவரின் முக்கியமான பேச்சுகளை செய்தியாக அனுப்பினேன். ஆனாலும் ஔிபரப்பு செய்யப்பட்டதென்னவோ அவரை பகடி செய்யும் காட்சிகளே! வலைத்தளங்களில் "ஏய் யாரா அது.. சொல்லிக்கிட்டே இருக்கேன்ல.. இங்க இருக்கவன் எல்லா சும்பைகளா....?" னு மேடையின் அருகே தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டிருந்த தொண்டர்களை விஜயகாந்த் அதட்டும் வீடியோ திருமங்கலத்துல பிரச்சாரத்தின் போது எடுத்தது. மறுநாள் தேனியிலும் ஆண்டிபட்டியிலும் அவரின் பிரச்சார செய்திகளை விடுத்து அவரை கேலி செய்யும் காட்சிகளே ஔிபரப்பு செய்யப்பட்டது. 

மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சிற்கு வழங்கிய முக்கியத்துவம் கூட விஜயகாந்திற்கு வழங்கப்படவே இல்லை என்பதே உண்மை! ஒருவேலை, அன்று ஊடகம் விஜயகாந்தின் பக்கம் நிதானமாக நின்றிருந்தால் இன்றைய அரசியல் சூழல் கூட மாறியிருக்கக்கூடும். அன்றும் 'எடிட்டோரியல் பாலிசி', அஜென்டா பாலிசியாகவே இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இப்படி தேர்தல் சமயத்தில் விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுதிலும் அவரை வைத்து கேலி செய்து அவரயே பகடை காயாக ஊடகங்கள் பயன்படுத்தி விஜயகாந்த்தை வீழ்த்திய உண்மைகள் ஒவ்வொன்றும் தற்போது வெளியே வர ஆரம்பித்துள்ளது.