24 special

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்

Annamalai
Annamalai

தமிழக பாஜகவில் மாநில மாவட்ட பொறுப்பில் உள்ள 12 தலைவர்கள் மாற்றபடலாம் எனவும் அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகள் பொறுப்பிற்கு நிர்வகிக்க படலாம் என தற்போது செய்திகள் வெளியான வண்ணம் இருக்கையில் அவற்றில் யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.


2024- நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் திமுக இன்னும் பிற கட்சி தலைவர்களிடம் நெருக்கமாக இருக்கும் நபர்களை மாற்ற மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக தற்போது பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
பிரபல தமிழ் நாளிதழில் இது குறித்து வெளியான செய்தியில் அண்ணாமலை பொறுப்பேற்ற பின், 2022 மே மாதம் கட்சியின், 66 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்களும், மாநில, அணி, பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக அண்ணாமலை, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உடன் நேரடியாகவும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவும், அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த விபரங்களை, அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ் மற்றும் தங்கள் மாவட்ட அமைச்சர்கள் உடன் நட்பு பாராட்டும் பா.ஜ.க ,வினர் கசிய விடுகின்றனர்.

குறிப்பாக, அமைச்சர் தியாகராஜனின், 'ஆடியோ டேப்'பை வெளியிட்டதில் இருந்து தனக்கு நெருக்கடியை கொடுக்க, தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருவதாக அண்ணாமலை கருதுகிறார்.எனவே, தி.மு.க., உடன் தொடர்பில் உள்ள மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகளை பறிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

இதற்காக, அக்கட்சியுடன் நெருக்கம் காட்டும் நிர்வாகிகளின் விபரங்களை தமிழக பா.ஜ.,க தலைமை சேகரித்து வருகிறது என செய்தி வெளியானது, இந்த சூழலில் நமக்கு நெருக்கமான பாஜக மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டதில் கோவையில் நடந்த சிறப்பு மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாகவும், ஜூன் மாதத்தில் தொடங்கும் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு வலு சேர்க்கும் விதமாக திமுகவுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமின்றி முறையாக கட்சி பணியில் ஈடுபடாத நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தலைமை தயாராகி வருகிறது என்றார்.
அண்ணாமலை பாத்தியாத்திரை தொடங்கும் நேரத்தில் திமுக பாஜக சார்ந்து வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்ய தயாராகி வருவதாகவும் அதற்கு பதிலடி கொடுக்க பாஜக மாநில தலைமையும் இப்போதே தயாராகிவிட்டதாம்.