24 special

இளம்பெண் கொடுத்த பேட்டி ...!மிரண்டு போன ஆளும் கட்சி

Mk stalin
Mk stalin

தமிழகத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஆளும் கட்சியை அசைத்து பார்த்துவிட்டது என்றே கூறலாம் ஒன்று கள்ள சாராய மரணம் மற்றொன்று டாஸ்மாக் மது விற்பனை குறித்து பொதுமக்கள் எழுப்பும் கேள்வி.இ


ந்த சூழலில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பேட்டி ஆளும் கட்சி வட்டாரத்தில் புகைசலை உண்டாக்கி இருக்கிறது, நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூறி அங்கு சட்ட விரோத சாராயம் விற்க படுவதாக பெண் நேரடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு பேசி இருக்கிறார்.

சாராயம் விற்க படுவது தடுக்கப்படும் என பெண் நினைத்து இருக்க மாறாக யார் புகார் கொடுத்தார்களோ அவர்கள் வீட்டிற்கு திமுகவினர் உள்ளே வந்து காவல்துறையில் புகார் ஏன் கொடுத்தாய் என மிரட்டி இருப்பதுடன் பெண்ணின் செல்போனை பறித்து மிரட்டி இருக்கிறார்கள்.

ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத பெண் நேரடியாக ஆட்சியர் அலுவலகம் சென்று என்ன நடந்தது என புகாராக கொடுத்தார் அதோடு நில்லாமல் நான் இந்த சாராய கடையை மூட எங்கு வேண்டும் என்றாலும் வர தயார்.. அதையும் மீறி கடையை துறந்தால் அந்த கடை முன்பே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொள்வேன் என அஞ்சாமல் பேட்டி கொடுத்தார் புகார் கொடுத்த பெண்.

இளம் பெண் கொடுத்த பேட்டி ஒட்டு மொத்த ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது, முன்பு எல்லாம் ஆளும் கட்சி என்றால் பயப்படுவார்கள் இப்போது எதற்கும் துணிந்து விட்டார்களே என புலம்பி தவிக்கிறதாம் சாராய கடை முதல் டாஸ்மாக் வரை கல்லா கட்டிய கும்பம்...!