24 special

என்ன இருந்தாலும் தல தலதான்....

ajith, payilvan ranganadhan
ajith, payilvan ranganadhan

இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை பலமாக தாக்கி சென்ற மிக்ஜம் புயலால் சென்னையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் ஏற்பட்ட பாதிப்பு என்பது சிறிதல்ல இதுவரை கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை அதிகம் என்றும் அந்த வங்கத்தில் சென்னை மக்கள் மழை நீர் வெள்ளத்தால் பெற்ற துயரமே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் அவற்றை பொய்யாக்கும் விதமாக 2023 சென்னையில் கன மழை மற்றும் மழை நீர் வடியாமல் ஒரு வாரத்திற்கு மேலாக தேங்கி இருந்து அன்றாட தேவைகள் எதுவும் கிடைக்காமல் குடிக்க நீரும் இல்லாமல் பெருந்துரங்களை சந்தித்தனர். 2015 வருடம் இழந்த உயரப்புகள் அதிகம் இன்றைய வருடம் உயிரிழப்புகள் அதிகம். மக்கள் ஆளும் அரசு மீது உள்ள கோபத்தில் ஒவ்வொருவரும் மழை நீர் வெள்ளத்திலும் வீதியில் இறங்கி போராடினர். 


இதனால் தமிழகத்தை ஆளும் திராவிட அரசு பெரும் பின்னடைவை சந்தித்தது. முன்னதாக மக்கள் படும் துயரங்கள் குறித்த செய்திகள் சமூக வலைதள வாயிலாக வெளியாகிக் கொண்டிருக்கும் பொழுதே சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மற்ற கட்சிகளும், திரையுலக பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்கள் என ஒவ்வொருவரும் தங்களால் முயன்ற உதவிகளை ஒவ்வொரு பகுதிகளிலும் மேற்கொண்டு வந்தனர் அந்த வகையில் விஜய் டிவியின் பிரபலங்கள் பெரும்பாலான உதவிகளை ஈடுபட்டதும் செய்திகளின் வெளியானது அது மட்டும் இன்றி நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தரப்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறித்த செய்திகளும் வெளியாகி சில விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் அதிக சம்பளங்களை பெறும் பெரும் பிரபலங்கள் தரத்தில் எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வந்த நிலையில் மழை முழுவதும் முடிந்த பிறகு திரை உலக பிரபலங்கள் நிவாரணத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசிடம் வழங்கினர், அப்படி யார் யார் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்ற புள்ளி விவரத்தோடு செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து திரையுலகில் அதிக விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்து விமர்சனங்களையும் வெறுப்பையும் சம்பாதித்து வரும் பயில்வான் ஒரு நடிகரை பாராட்டி பேசி உள்ளார். அதுவும் மழை வெள்ளத்தில் அவர் செய்த உதவிகள் ஒன்றுமே வெளியில் தெரியவில்லை அந்த அளவிற்கு அவர் விளம்பரத்தை வெறுப்பவர் என்ற கருத்தையும் முன்வைத்து அந்த நடிகரை புகழ்ந்துள்ளார். 

அந்த நடிகர் யார் என்றால்? நம்ம தல அஜித் குமார்! சென்னை மழை வெள்ளத்தால் பாதிப்புகளை அடைய ஆரம்பித்ததிலிருந்தே தனது வீடு கதவை மக்களுக்காக திறந்தே வைத்து உதவி என்று வரும் அனைவருக்கும் உணவளித்து, மழையால் தனது குடியிருப்பு பகுதிகளை இழந்து தவித்த மக்களை தன் வீட்டிலேயே தங்க வைத்து மழை பாதிப்புகள் அனைத்தும் தீர்ந்து அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பு ஒவ்வொருவர் கையில் தலா பத்தாயிரம் ரூபாயை கொடுத்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை இந்த மழை வெள்ள பாதிப்பிற்கு நடிகர் அஜித் செலவழித்துள்ளார் என்று திரை விமர்சகரும் நடிகர்ருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நடிகர் விஷ்ணு விஷாலும் அமீர் காணும் மழை வெள்ளத்தால் சிக்கிய செய்தி வெளியானவுடன் அவர்களையும் அவர்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்த மக்களின் மீட்பு நடவடிக்கைகள் முறையாக நடந்ததா என்பதை தெரிந்து கொள்வதற்காக நேரிலே சென்று அறிந்து கொண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் பாதுகாப்பான இடத்திற்கு திரும்புவதற்காக வாகன சேவையையும் நடிகர் அஜித்தை ஏற்பாடு செய்துள்ளார் என்ற செய்தி நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.