
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தாய் மதத்திற்கு திரும்பியதாக பல செய்திகள் வெளியானது. அதாவது கடந்த வருடம் தனது 80 வது வயதை எட்டிய எஸ்.ஏ சந்திரசேகர் தனது மனைவி ஷோபா உடன் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயில் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபட்டார். அதற்குப் பிறகு இந்த வருட தொடக்கத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று அக்னி திர்த்தம் உள்ளிட்ட அனைத்து தீர்த்தங்களிலும் புனித நீராடி தனது குடும்ப நலம் மற்றும் மன அமைதி வேண்டி பூஜை செய்து வழிபட்டார் அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொழுதும் திட்டமிட்டு எந்த கோவிலுக்கும் செல்வதில்லை மனதில் தோன்றும் பொழுது சென்று விடுவேன், இங்குள்ள புனித திருத்தங்களில் நீராடுவது எனக்கு மிகவும் மன அமைதியை கொடுக்கிறது உடலுக்குள் அமைதி நிலவுகிறது.
அதுமட்டுமின்றி சிவனுக்கு உண்டான ராசியை நான் பெற்று இருக்கிறேன் எல்லா இடத்திலும் சிவன் இருக்கிறார் அவரை நினைத்து ஒரு நிமிடம் அமர்ந்தாலே புது எனர்ஜி கிடைக்கிறது என்று இந்து மதத்தின் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையை தெரிவித்திருந்தார்.இது மட்டும் இன்றி வாரம்தோறும் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு பிரசாதங்களின் இவர் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இவரை அடுத்தே! வெள்ளி திரையில் கதாநாயகராகவும் குணசேத்திர நடிகராகவும் வலம் வந்த லிவிங்ஸ்டன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியதாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது கிறிஸ்தவ மதத்தின் மீது போர் அடிப்பதாகவும் இதனால் தற்பொழுது இந்து மதத்தின் மீது பற்று ஏற்படுவதாகவும் இந்து கோவில்களுக்கு சென்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாடுவதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியின் பொது தெம்பும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
என் நெற்றி நடுவில் கிருஷ்ணர் தான் வசிக்கிறார் என்று கூறினார். இப்படி இயக்குனர் எஸ் எஸ் சந்திரசேகரை தொடர்ந்து லிவிங்ஸ்டன் இந்து மதத்தின் பக்கம் திரும்பி உள்ளார் என்ற கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் லிவிங்ஸ்டனை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இந்து மதத்திற்கு மாறி உள்ளார். அதாவது கடந்த வருடத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் திருமணத்திற்கு அடுத்த இரண்டு நாட்கள் முழுவதும் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள கோவில் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன்பாகவும் தனது குலதெய்வ கோவிலை தேடி சென்று அங்கு வழிபாடும் நடத்தி வந்தார். அப்பொழுதே திருமணத்திற்கு பிறகு இந்துவாக லேடி சூப்பர் ஸ்டார் மாறிவிட்டாரா என்ற கருத்துக்கள் எழுத நிலையில் தற்பொழுது அதனை உறுதிப்படுத்தும் வகையிலான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
கையில் விநாயகர் படத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் நிற்க அவர் அருகில் நெற்றியில் குங்குமத்துடன் கையில் விளக்கு ஏந்தி கொண்டு தீவிர வலதுசாரியாக மாறி நயன்தாரா நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படமும் சரியாக ஓடாத காரணத்தினால் இனி இடதுசாரி சித்தாந்தங்கள் பேசப்போவதில்லை! இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட கருத்துக்களை தாங்கி உள்ள படங்களிலும் நடிகை நயன்தாரா நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வலம் வருகிறது.

 
                                             
                                             
                                            