நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 20 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் வீடு இடிந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உணவு இல்லாமலும் அரசியல் தலைவர்கள் யாரும் பார்க்காத சூழ்நிலை இருந்து வருவதாக மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மழை அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பொழியக்கூடும் என்றும் ரெட் அலெர்ட் கொடுக்கப்படுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்தது.
சென்னையில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை தாவி தவிச்சது எல்லாம் முடிந்து இப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்தனர், மக்களுக்கு தவியணனிவரான தொகையை தமிழக அரசு தருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், கொஞ்சம் ஓய்வெடுத்த பருவமழை தென் மாவட்டம் சென்று பெரிய சம்பவத்தை கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நெடு இரவு வரை நெல்லை, தூத்துக்குடி, குமாரி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பொழிந்ததன் காரணத்தால் வரலாறு காணாத மழையாக பெயர் பெற்று வெள்ளமாக மாறியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் சிக்கி வருகின்றனர்.
தென் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை சென்னையை விட மிக அதிக கனமழை என கூறப்படுகிறது. பல்வேறு ஏரிகள், குளங்கள் என எல்லாம் நிரம்பி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. வானிலை ஆய்வு மையமும் நாளை இரவு வரை இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பலரும் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளி, கல்லுரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் மக்கள் படம் துயரத்திற்கு சென்றுள்ளனர் பல கிராமங்களில் மக்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி மீட்க ஹெலிகாப்ட்டர் இருந்தால் மட்டுமே அவர்களை மீட்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த பாதிப்படைந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த வித உதவியும் செய்ய அமைச்சர்கள், எம்எல்ஏ என யாரும் வரவில்லை என மக்கள் வருத்தம் தெரிவிக்கும் நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் சமூக தளத்தில் ஒரு பதிவு மட்டும் இட்டு விட்டு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம் செய்து விட்டு தனது கடமை முடிந்தது போல் எண்ணி நாளை டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கோவை விமான நிலையம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதனை அறிந்த தென் மாவட்ட மக்கள் இணையத்தில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மக்கள் இங்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை காண வராமல் டெல்லிக்கு தங்களது கூட்டணிக்கு செல்வது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் தானே நாளைக்கு வாக்கு செலுத்துவார்கள் கூட்டணி சேர்ந்தவர்கள் அல்ல என கடுமையாக கொந்தளிப்புடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி முதல் முறையாக கூடும் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கூட்டணி கூட்டத்தை முடித்து விட்டு பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரண தொகையையும் கேட்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இருப்பினும் மக்களை காணாமல் டெல்லிக்கு சென்றது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.