24 special

அமர் பிரசாத் விசயத்தில் திமுக நினைத்தது தலைகீழாக மாறியது...!

mk stalin, amarprasad
mk stalin, amarprasad

சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் வீட்டை முன்பு நடப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அடுத்து காவல்துறையினரும் மாநகராட்சியும் கொடிக்கம்பத்தை அவற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அப்பகுதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெடி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதற்குப் பிறகு நீதிமன்ற காவலில் புழலிலும் அடைக்கப்பட்டனர். 


ஆனால் இந்த விவகாரத்தில் தனது கணவர் கைது செய்யப்பட்டது பொய்யான வழக்கு என்றும் ஜேசிபி எந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்தின் பொழுது தனது கணவர் அப்பகுதியில் இல்லை என்றும் தேவை இல்லாமல் பொய் வழக்குகளை சித்தரித்து குண்டாஸ் சட்டத்தில் தனது கணவரை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும் அவரது மனைவி இந்த வழக்கிற்கு தடை விதிக்க கோரி சென்னையில் உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா மனு தாக்கல் செய்தார். 

அதே சமயத்தில் அண்ணாமலையால் தற்போது தமிழக முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணமானது சிறப்பாகவும் விமர்சியாகவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்று நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணத்தின் முக்கிய பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெடி செயலாற்றி வருகிறார் ஒவ்வொரு நாளும் நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய இடம் அங்கு அண்ணாமலைக்கு போடப்படுகின்ற காவல் நடை பயணத்தில் கலந்து கொள்கின்றவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு என்ற ஒவ்வொன்றையும் சரியாக திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தால் நடைபயணத்தின் திட்டங்கள் சீர்குலைந்து நடைபயணம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்ற திட்டத்தை தீட்டி அறிவாலய தரப்பு இந்த பொய் வழக்கை சித்தரித்து நாடகம் ஆடி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

ஆனால் அமர் கைது செய்யப்பட்டபோது நடைப்பயணம் எந்த ஒரு தடையும் இன்றி வழக்கம் போல் திட்டமிட்டபடி சரியாக நடந்தது திமுக தரப்பிற்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கிடையிலே தென்காசியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமல் பிரசாத் ரெடி மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக அவரை கைது செய்தனர்.இந்த வழக்கும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது ஆனால் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படும் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கப்பட்டது. 

அதாவது அண்ணாமலையின் யாத்திரை முடியும் வரை உள்ளே வைத்து விடலாம் என சில ஆளுங்கட்சி தரப்பினர் தொடர்ந்து கணக்கு போட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது ஆனால் அமர் இல்லையென்றாலும் யாத்திரை சிறப்பாக நடந்து வருவதும் டெல்லியில் இருந்து இறங்கிய முக்கிய குழுவினர் அமர் பிரசாத் ரெட்டியின் கைதை முக்கியமாக பார்ப்பதாகவும், இதனால் திமுக அரசிற்கு தான் சிக்கல் எனவும் தேவையில்லாமல் அமர் பிரசாத் ரெட்டி விவகாரத்தில் விளையாடுகிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து அவரை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்திவிட்டார்கள் என்றும் அமர் விவகாரத்தில் இறங்கி திமுக தனக்குத்தானே வினையைத் தேடிக் கொண்டது என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏன்டா அமர் மீது கைவைத்தோம் எனவும் ஒரு பேச்சு அறிவாலயத்தில் எழுந்ததாக கூறப்படுகிறது.