24 special

அதிகாரியை தாக்கிய வழக்கில்!...முதல் குற்றவாளி மேயர்..நடைப்பயணத்தில் அண்ணாமலை!

annamalai, mayor kavitha
annamalai, mayor kavitha

கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையின் போது அதிகாரிகளை தாக்கிய முதல் நபர் திமுக மேயர் என்று சத்தியம் செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.என் மண் என் மக்கள் நடைபயண பாதயாத்திரை நிகழ்ச்சி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். அதில், தனது சொந்த தொகுதியான கரூரில் பாஜக பிரமுகர்கள் பெரும் வரவேற்பு அளித்திருந்தனர்.


அந்த வகையில் திரும்பும் திசையெல்லாம் அண்ணாமலை படத்தை கொண்ட பேனர் வைத்திருந்தனர். அதனை, கரூர் திமுக மேயர் அப்புறப்படுத்தப்படாதல் அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.  கரூரில் நேற்று மாலை நடைப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கரூர் மேயர் கவிதாவை ரவுடிக் கும்பலுக்கு தலைவி என்றும் வருமான வரித்துறைத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கிலிருந்து கவிதா ஒரு போதும் தப்ப முடியாது எனவும் அண்ணாமலை காட்டமாக எச்சரித்தார்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளியே கரூர் மேயர் கவிதா தான் என்றும் அவர் மீது தாங்கள் பெட்டிஷன் போடவுள்ளதாகவும் மேயர் கவிதா எங்கே தப்பி சென்று தலைமறைவானாலும்  அவரை விடமாட்டோம் அவர் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார் என்று தெரிவித்தார். ஊழலில் சிக்கிய முதல் அமைச்சர் செந்திலாபாலாஜியே இன்னும் சிறையில் தான் இருக்கிறார். அவரை விட மேயர் கவிதா ஒன்றும் பெரிய ஆள் கிடையாது.

அதிகாரிகளை தாக்கியதை லோக்கல் போலீசார் உதவியுடன் மூடி மறைத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று ஒருபோது நினைக்காதீர்கள் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.எந்த அதிகாரிகள் மீது கைவைத்தாலும் நிச்சயம் தண்டனை விதிக்கப்படும் அதலிம் கரூர் மேயர் கவிதா மத்திய அரசு அதிகாரிகள் மீது கை வைத்திருக்கிறீர்கள் அது சிபிஐ விசாரணைக்கு போகாதாஎன கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கரூர் மேயர் கவிதா வெளியே இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துக் கொள்ளட்டும் என்றும் அதுவரை பாஜகவின் ப்ளக்ஸ் பேனர்களை கிழிப்பது, போஸ்டர்களை கிழிப்பது போன்ற பணிகளை பார்த்துக்கொள்ளட்டும் எனவும் உள்ளே சென்றுவிட்டால் இதை செய்ய முடியாது எனவும் கலாய்த்தார்.

நீங்கள் செய்யும் ஊழலை எல்லாம் மேலே இருக்கும் ஆண்டவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். தவறு செய்தவர்கள் எல்லாம் நிச்சயம் தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். திமுகவில் இருப்பவர்கள் ஆட்சி பலத்தை கையில் கொண்டு ஆடிவருகிறார்கள். ரொம்ப ஆடக்கூடாது, ஆடியவர்கள் எல்லாம் உள்ளே தண்டனையை அனுபவிக்கின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடினார். 

தொடர்ந்து அமைச்சர் எ.வ வேலு வீட்டில் சோதனை நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் காவல்துறையை பார்த்தால் பரிதாபம் வருகிறது. திமுக சொல்வதை கேட்டு தலையாட்டும் போமியக்க மாறியுள்ளது.  அமைச்சர் துரைமுருகன் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் அடுத்து தன் மீது ரெய்டு வந்துவிடக்கூடாது என்று, கோவில் கோவிலாக செல்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பி-க்களுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சியில் அமருவது உறுதி என பேசினார்.