
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் திமுக பாஜக இடையே விவாதங்கள் ஒரு புறம் அதிகரித்து வரும் வேலையில் நாளுக்கு நாள் பாஜக வெளியிடும் வீடியோக்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்ககி வருகின்றன, பாஜக வெளியிட்ட DMK FILES வீடியோ நாட்டை உலுக்கிய நிலையில் அதில் இடம்பெற்ற செந்தில் பாலாஜி தொடங்கி எ வ வேலு வரை வருமான வரித்துறை பிடியில் சிக்கி இருக்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சர்ச்சைகளை அந்நியன் பட பாணியில் பாஜக எடுத்து இருக்கும் வீடியோ தற்போது பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.அந்நியன் படத்தில் விக்ரம் அந்நியனாக மாறி பேசுவது போன்று இந்த வீடியோவில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை ஒட்டு மொத்தமாக ஒரே வீடியோவில் மக்களுக்கு புரியும் வண்ணம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.சினிமா ஸ்டைலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.