24 special

ரஞ்சனா கைது கண்டித்து.... திமுகவை சாடிய நாம் தமிழர்!

durai murugan, ranjana
durai murugan, ranjana

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை தாக்கிய பாஜக பிரமுகர் ரஞ்சனாவிற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ரகளை செய்து வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பாஜக பிரமுகரும், சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா பேருந்தை நிறுத்தி தட்டி கேட்டார்.


பின்னர் டிரைவரிடம் இப்படி மாணவர்கள் தொங்குகிறார்களே, அவர்களை செருப்பால் அடித்து உள்ளே போகவைத்திருக்க வேண்டாமா என்று கேட்டார். பின்னர் படியில் தொங்கிய மாணவர்களை சரமாரியாகத் திட்டினார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த ரஞ்சனா நாச்சியாரின் வீடியோ சமூக தளத்தில் வைரலானது.இதனால் அவர் மீது அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களை தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறை.

அதனை கொண்டு இன்று காலை ரஞ்சனாவை கைது செய்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நல்லது தானே செய்தற் அவர் மீது எதற்கு வழக்கு என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் சமூக தளத்தில் அந்த விடியோவிற்கு நெட்டின்சன்கள், மாணவர்கள் தங்களை ஹீரோ என்று நினைத்து கொண்டு படியில் பயணம் செய்து வருகின்றனர். இது போல் பேருந்தில் தொங்கி பயணம் செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தாலும் காவல்துறை, மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பல விழிப்புணர்வு நடந்தாலும் மாணவர்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. குறிப்பாக, அரசு பேருந்துகளில் தான் இந்த மாதிரி நிறைய சம்பவம் நடக்கிறது. இந்த நிறைய விபத்துகளும் ஏற்பட்டிருக்கிறது. இதை பேருந்தில் இருப்பவர்கள் தட்டி கேட்டால் அவர்களிடம் சண்டைக்கும் செல்கிறார்கள். இதனால் சிலர் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். இதற்கிடையில் சென்னையில் நடந்த சம்பவத்தை தட்டி கேட்ட ரஞ்சனாவை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் நடிகை ரஞ்சனா நாச்சியாரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நீதிமன்றம் சென்றால் ஒரு நொடி கூட நிற்காத வழக்கிற்கு கைது செய்ய திராவிட மாடல் அரசால் மட்டுமே முடியும். அவர் மாணவர்களை திட்டியது அடித்தது தவறென்றால் அவர் தடுக்காமல் விட்டு ஏதோ ஒரு மாணவர் கீழே விழுத்து விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த நடத்துனரும் அரசும் பொறுப்பேற்குமா?

செயலின் நோக்கத்தை பார்க்காது அதை யார் செய்தார் என்கிற பின்புலத்தை வைத்து கைது செய்வது எந்த வகையில் நியாயம் ?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.இதேபோல் பாஜக பிரமுகர் அமர்ப்பிரசாத் ரெட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்ட போது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் ஒரு வழக்கில் கைது செய்துவிட்டு தொடர் வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கதக்கது என்று ஆதரவு தெரிவித்திருந்தார்.