தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஆக மாறியவர் கலக்கப்போவது யாரு பாலா. மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து சினிமா துறையில் எந்த ஒருபின்புலமும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் டெலிவிஷனில் நுழைந்து தற்பொழுது மக்களின் ஆதரவை பெற்று சில படங்களிலும் நடித்து வருகிறார். அதாவது இவர் தனக்கு என்று தனிப்பட்ட ஒரு கமெண்ட் கொடுக்கும் ஸ்டைலை வைத்துள்ளார். இவரிடம் ஏதோ ஒரு கருத்தை கூறினாலும் அதற்கு மாறான கமெண்ட் அடிக்கும் திறனை பெற்றிருந்ததால் மக்களால் ஈர்க்கப்பட்டு, தற்பொழுது தனக்கென்று சில ரசிகர்களையும் அவர் வைத்துள்ளார். இந்த நிலையில் தமக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வரும் கே பி ஒய் பாலா சினிமா மூலம் தான் மட்டும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறக்கூடாது தன்னை சுற்றி இருந்தவர்களுக்கும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து அதனை செய்து வருகிறார்.
அந்த வரிசையில் ஏழை எளிய குழந்தைகளுக்கு படிப்பதற்கான செலவையும் ஏற்றுள்ளார், இன்ஸ்டாகிராம் மூலம் தனது மகளின் மருத்துவத்திற்காக விண்ணப்பம் கோரி இருந்தவரின் கோரிக்கையை ஏற்று தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து உதவி செய்தார் அதற்கு பிறகு மலைவாழ் மக்களுக்காகவே ஒரு ஆம்புலன்ஸ் சொந்தமாக வாங்கி கொடுத்திருந்தார். தான் உழைத்து சேர்த்து வைத்த செல்வத்தில் மக்களுக்கு சிறிதளவு எடுத்துக் கொடுத்து வரும் கே பி ஒய் பாலாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வந்த நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, அந்த சூழ்நிலையிலும் தன்னிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாயை 2000 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் என்று வழங்கி உதவி செய்தார்.
அதற்குப் பிறகும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி அவர்களிடமே நேரடியாக கொண்டு சேர்த்தார், இப்படி ஒட்டுமொத்தமாக சென்னை மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் இவர் செலவழித்துள்ளார். கோடி கோடியாக சம்பாதித்து வரும் பிரபலங்கள் கூட இதுவரை எந்த உதவியும் எங்களிடம் நேரடியாக செய்யவில்லை ஆனால் நீ வந்து பண்றியேப்பா என மக்கள் இவரை வாழ்த்திய வீடியோக்களும் கேபிஒய் பாலாவின் இந்த செயலுக்கு பல பாராட்டுகளும் சமூக வலைத்தளத்தில் வளம் வந்தது. இருப்பினும் உங்களுக்கென்று நீங்கள் சேர்த்து வைக்காமல் இப்படி மக்களுக்கு வாரி இறைக்கிறீர்கள் நாளை நீங்கள் கஷ்டப்படும் பொழுது உங்கள் கஷ்டத்தை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள் என்ற விமர்சனத்தையும் கேபி ஒய் பாலா சந்திக்க நேர்ந்தது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலா தன்னுடைய கைவிரல் ஒடிந்து கட்டுப்போட்டத்துடன் ஒரு போட்டோவை பதிவிட்டு பலருக்கும் உதவி செய்தது தனக்கு மனநிறை கொடுத்தது இருப்பினும் என்னுடைய கைவிரல் உடைந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார். ஓடி ஓடி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த பாலாவிற்கு தற்பொழுது உதவிகள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் விரல் சீக்கிரமாகவே குணமடைந்து படப்பிடிப்பிற்கு செல்லலாம் என பாலா காத்திருப்பதாக தெரிகிறது. அவ்வளவு பேருக்கு உணவளித்து வாரி வாரி உதவிகளை வழங்கிய விஜயகாந்தையே தற்பொழுது திரை உலகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்த நிலையில் KPY பாலா மட்டும் எம்மாத்திரம் இனிமேலாவது பிழைத்துக் கொள் தம்பி என பாலாவிற்கு அட்வைஸ்கள் கமெண்டுகளாக பறக்கின்றன..