24 special

போதும்டா சாமி உங்க சகவாசம்! கையெழுத்து கும்பிட்ட விஜய் சேதுபதி!

vijaysethupathy, periyar
vijaysethupathy, periyar

குறுகிய காலத்தில் தனது எளிமையான பேச்சு மற்றும் தோற்றத்தால் அதிக ரசிகர்களை பெற்ற ஒரு நடிகர் என்றால் அவர் நடிகர் விஜய் சேதுபதி. குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிகராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதிக்கு  தென்மேற்கு பருவக்காற்றால் பெரும் வரவேற்பு கிடைக்காமல் போனாலும் அதற்குப் பிறகு அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணமாக இரண்டு படங்களும் விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் முகம் மக்களை ஈர்க்க ஆரம்பித்தது. தற்பொழுது விஜய் சேதுபதி தமிழ் திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்த வருகிறார்,  மிகவும் கச்சிதமாக பொருந்தப்பட்டு வில்லன் கேரக்டரில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை! நடிப்பில் தனது திறனை வெளிப்படுத்தி மக்களிடம் ஆதரவை பெற்று வரும் விஜய் சேதுபதி பல தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு அதிக பேட்டிகளை கொடுத்துள்ளார் 


அப்படி அவர் கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் பெரியார் சம்பந்தப்பட்ட சில கருத்துக்களையும் கூறுவார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பெரியார் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்து என்னை ஆள விடுங்கள் இதுவரை நான் கலந்து கொண்டதே போதும் என்று கூறி மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விமர்சனங்களை அதிகமாக சந்திக்க நேர்கிறது அதனால் இந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்றும் விஜய் சேதுபதி ஈ.வே.ரா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்துள்ளார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து விஜய் சேதுபதி தரப்பிலும் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த தகவல் குறித்து விவரம் அறிந்த சிலர் கூறும் பொழுது, ஏற்கனவே பெரியாரின் கருத்துக்களை அதிகம் பேசுபவருக்கு திரை உலகில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது! இதனால் நாம் பிழைத்துக் கொள்ள வேண்டும் பெரியார் விஷயம் குறித்து நாம் பேசக்கூடாது என விஜய் சேதுபதி  முடிவெடுத்து இருப்பதற்கு இதுவே காரணம் என கூறப்படுகிறது. 

ஏற்கனவே பெரியார் குறித்து பேசி வந்த சத்யராஜ், சூர்யா, ஜோதிகா சிவக்குமார் போன்றவர்களுக்கெல்லாம் தற்பொழுது பின்னடைவு ஏற்பட்டு திரையுலகில் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இனி பெரியாரை பற்றி பேசுபவர்களுக்கும் சத்யராஜ், சிவக்குமார் குடும்பத்திற்கு ஏற்பட்ட கதி நமக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என விஜய் சேதுபதி இந்த முடிவு எடுத்திருக்கலாம் என திரையுலக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் விஜய் சேதுபதி பெரியார் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளாமல் நிராகரித்ததது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பெரியார் கும்பல் கடும் அதிர்ச்சியில் உள்ளதாம், முன்னாடியெல்லாம் பெரியார் நிகழ்ச்சி என்றால் கூப்பிட்டால் அனைவரும் பேச வருவார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் பெரியார் நிகழ்ச்சி பேச வரவேண்டும் என்றால் அதிகம் வரமாட்டேன் என மறுக்கிறார்கள் இப்படியே போனால் என்ன செய்வது நாம் ஒரு நிகழ்ச்சி கூட நடத்த முடியாதா என புலம்பலில் வேறு இருக்கிறதாம் பெரியார் கும்பல்.