கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வாக்குகளை பெற்று தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது. இதற்கு முக்கிய காரணமாக தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்கு முன்பு இருந்தே திமுக குறித்த வீடியோ பதிவுகள் போஸ்டர்கள் தொலைக்காட்சி விளம்பரங்களாக ஒளிபரப்பப்பட்டது மேலும் பேனர்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது, அதிலும் குறிப்பாக திமுகவிற்கு என்று பிரத்தியேக பாடல் ஒன்று வெளியானது அவற்றை மணிக்கு ஒரு முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக செய்து மக்களின் நடைமுறையில் அந்த பாடலை பாடுவதற்கு போன்ற நிலைமையை திமுக ஏற்படுத்தியது. இப்படி பல வெற்றி செய்து திமுக 2021ல் ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய நபராக பிரசாந்த் கிஷோர் என்கிற தேர்தல் வியூக நிபுணர் பார்க்கப்படுகிறார். தமிழக முதல்வரின் மருமகனான சபரீசன் தலைமையில் இதற்கென்று தனி குழுவையும் அமைத்து அந்த குழுவிற்கு மொத்த வழிகாட்டுதலையும் பிரசாந்த் கிஷோரே மேற்கொண்டார் அதன் காரணமாகத்தான் திமுக வெற்றி பெற்றது எனவும் இன்றும் திமுகவினரே கூறுவார்கள்..
இந்த நிலையில், தற்போது ஐபக் நிறுவனத்திலிருந்து வெளியேறி தேர்தல் விவரங்களை வகுத்துக் கொடுக்கும் வேலையிலிருந்தும் பிரசாந்த் கிஷோர் ஓய்வு பெற போவதாக சில தகவல்கள் சமீப காலத்தில் வெளியானது அதற்கு ஏற்றார் போல் தனது சொந்த மாநிலமான பிகாரிலே ஜன் சூரத் என்கின்ற பெயரில் நடைப்பயணத்தை இவர் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நடை பயணத்தில் மக்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த அமைப்பில் இணையலாம் உங்களை வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட கவுன்சிலர் வரை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைக்கிறேன் கைகோர்த்து செயல்படுவோம் என்று பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட அறிவிப்புகள் பெரும் பரபரப்பானது. இப்படி தனது நடை பயணத்தில் பிஸியாக இருக்கும் பிரசாந்த் கிஷோரை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வியூகம் அமைப்பதற்கு திமுக அவரை அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய தகவல் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.. அந்த பேட்டியில் பிரசாந்த் கிஷோரிடம் எப்படி பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆளுமையை கொண்டவராக உள்ளார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பிரதமர் மோடியின் ஸ்ட்ரெந்த்தாக நான் பலவற்றை கூற முடியும் ஆனால் ஏதேனும் ஒரு சிறந்த ஒரு ஸ்ட்ரென்த் என்றால், பிரதமர் தனது முதல் 15 வருடங்கள் முழுவதும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அதன் மூலம் மக்களுக்கு நேரடியாக பணியாற்றினார். அடுத்த 15 வருடங்கள் முழுவதும் பாஜகவின் ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு கற்று தேறினார் அதற்கு பிறகு பிரதமர் மூன்றாவது 15 ஆண்டுகளில் அவர் முதலமைச்சராக பணியாற்றினார்.
இப்படி இந்த 45 வருடங்களையும் ஒன்றிணைத்து அதன் மூலமாக கிடைத்த அனுபவங்களே பிரதமர் மோடியின் மொத்த பலம், தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலமே மக்கள் என நினைக்கிறார்கள் என்பதை பிரதமர் எளிதாக புரிந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடிக்கு சிறப்பான முறையில் உள்வாங்கும் திறன்கூட அவருக்கு கைகொடுத்துள்ளது' என்று பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து அறிவாலயத்தில் இருந்து பிரசாந்த் கிஷோரை அழைத்து தேர்தல் வேலைகளை எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று கேட்கப்பட்ட பொழுது முதலில் உங்கள் அரசின் மீது இருக்கும் அதிருப்திகளை சரி செய்யுங்கள், இந்த முறை உங்களுக்கு சிரமம் தான் என பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் இந்த பதிலை கேட்ட அறிவாலயம் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.