24 special

செந்தில் பாலாஜி வழக்கில்....! முக்கிய தீர்ப்பை கொடுத்த நீதிபதி....!

Senthil balaji
Senthil balaji

செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு தற்காலிக தீர்வாக அமையும் என திமுகவினர் மகிழ்ச்சியில் இருந்துவரும் நிலையில் தற்போது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் முழு தீர்ப்பின் மூலம் வெளிவந்து இருக்கிறது.


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.கடந்த ஜூன் 13-ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். இதனால் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.செந்தில் பாலாஜி தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கத்துறை சட்டவிதிகளை பின்பற்றவில்லை. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது” என்று வாதங்களை முன் வைத்தார்.

இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 10.45  மணிக்கு ஆட்கொணர்வு மனு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பு வழங்கினார்.அதில் செந்தில் பாலாஜியை விடுதலை செய்யவேண்டும் எனவும், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கதுறைக்கு அதிகாரம் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கினார். இந்த சூழலில் இதற்கு நேர் எதிராக நீதிபதி பரத சக்ரவர்த்தன் தீர்ப்பு வழங்கினார்.

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரி என்றும், செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் வழங்கி தீர்ப்பு வழங்கினார் அத்துடன் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியான நிலையில் அவரை சிறை சாலைக்கு மாற்றி அங்கு இருந்து மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தீர்ப்பு வழங்கினார்.

இவை அனைத்தையும் தாண்டி நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த மற்றொரு தீர்ப்பு தான் இப்போது செந்தில் பாலாஜி தலையில் இடியை இறக்கி இருக்கிறது.  செந்தில் பாலாஜியை கைது செய்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலத்தை விசாரணை காலமாக கணக்கிட கூடாது எனவும் மேலும் செந்தில் பாலாஜி உடல் நிலை சரியான நிலையில் அவரை அமலாக்க துறை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்யலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் தற்போது மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாறி இருக்கிறது, நீதிபதி பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில் தெளிவாக ஏன் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சரி என்றும் அவரது மனைவி மேகலா வழக்கை தள்ளுபடி செய்தது ஏன் எனவும் குறிப்பிட்டு இருப்பதால் விரைவில் அடுத்த தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கு எதிராக வருமே தவிர சட்டத்தின் படி செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வராது என உடன் பிறப்பு வழக்கறிஞர்களே மேடையில் புலப்பிய தகவல் அடுத்தது என்ன என்பதை சாமனிய பொதுமக்களுக்கு விளக்கி இருக்கிறது.இன்னும் அதிகபட்சம் 7 நாட்கள் தான் செந்தில் பாலாஜியின் மருத்துவமனை  காட்சிகள் அரங்கேரும் நிலையை இன்றைய மாறுபட்ட தீர்ப்பு உறுதி செய்து இருக்கிறது.