கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மதுரை மாவட்டம் மேலவளவு நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் கலந்து கொண்டார். விழாவில் பேசிய திருமாவளவன் ஆயிரக்கணக்கான திருமணம் பண்ணி வைத்த எனக்கு திருமண ஆசை வராதா! எனக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள் குழந்தை இருக்கிறார் என்று வீட்டுக்கு சென்றால் குடும்பத்தை பார்த்து பேச வேண்டும் என்ற சிந்தனை எனக்கு வராதா! நான் என்ன நொண்டியா முடமா! என்று பேசினார் இதன் பின்னர் திருமாவளவன் பேச்சிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. ஒரு உதாரணம் சொல்வதற்கு மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதத்தில் பேசியது அழகல்ல என்று பெரும் சர்ச்சை எழுந்தது. திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பல தரப்பிடமிருந்து ஆட்சேபணைகள் எழுந்தன!
மேலும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்தார். இப்படி பேசுவது முறையா? இது போன்று நீங்கள் பேசுவது இது இரண்டாவது முறை? எந்த வகையில் நீங்கள் பேசியது நியாயம்? சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை கேட்டீர்கள் சோசியல் கான்சியஸ் இல்லையா என்று! இப்போது நாங்கள் கேட்கிறோம் இதுதான் உங்கள் சோசியல் கான்சியஸா?
ஏன் எங்களுக்கு திருமண ஆசை இருக்க கூடாதா? ஏன் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து வாழவில்லையா? இப்படி மாற்றுத்திறனாளிகளை குறைத்து பேசுவது உங்கள் தலைமைக்கு அழகா? என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் பேச்சால் நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன் என்று திருமாவளவன் பேச்சுக்கு டிசம்பர் 3 இயக்கம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது என்று பதிவிட்டதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது திருமாவளவன் இப்படி பேசுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல இரண்டாவது முறை என்றும், பத்திரிகையாளர்கள் முன்பு கூட சோஷியல் கமர்ஷியல் இல்லையா என்று கேட்டார் தற்போது நீங்கள் இப்படி பேசி இருப்பதன் மூலம் உங்களுக்கு சோசியல் கமர்சியல் இல்லையா என்று நான் கேட்கிறேன் என்றும் பேராசிரியர் தீபக் நாதன் குறிப்பிட்டிருப்பது திருமாவளவன் தரப்பிற்கு பெரும் பதிலடியாக அமைந்தது.
பிறகு திருமாவளவன் தான் பேசியது பெரும் விபரீதம் ஆவதை உணர்ந்து திருமாவளவன் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் தனது டிவிட்டர் பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'உள்நோக்கம் ஏதுமில்லை தோழர்கள் பொறுத்தருளவும்! கடந்த சூன்-30 அன்று மேலவளவில் நடந்த "மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்" நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன். மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர், அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும் என்று பதிவிட்டுள்ளார்.
ஊருக்கே நியாயம் பேசிவிட்டு இப்படி திருமாவளவன் நடந்துகொள்ளலாமா என இன்னமும் சில எதிர்ப்புக்குரல்கள் தொடர்ந்து எழுகின்றன! மேலும் திருமாவளவனுக்கு இதே வேலையாக போய்விட்டது சமீபத்தில் விஜய் பற்றி பேசிவிட்டு பின்னர் பின்வாங்கினர், அதே போல் இப்பொது மாற்றுத்திறனாளி குறித்து பேசிவிட்டு பின் வாங்குகிறார் என பல்வேறு சமூக வலைதளவாசிகள் கூறுகின்றனர்.