இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டு இருக்க காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அரை தூக்கம் கெட்டு இருக்கிறது போதாத குறைக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது புதிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை செந்தில் பாலாஜி தரப்பிற்கு கொடுத்து இருக்கிறது.
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகளும் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். முதலில் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பினை வாசித்தார். அப்போது அவர், "இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் என்றும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். இதை கேட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது.
இதையடுத்து ஆன்லைன் வாயிலாக வீடியோ மூலம் இணைந்த நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், சிகிச்சை முடிந்து குணம் அடைந்தபின் செந்தில் பாலாஜியை சிறையில் உடனடியாக அடைக்க வேண்டும் என்று கூறியதுடன் மனுவினைத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.அத்துடன் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் காலம் கஷ்டடி காலமாக கருத பட கூடாது எனவும் சிகிச்சை முடிந்ததும் அமலாக்கதுறை கஷ்டடியில் எடுத்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கு வேறு ஒரு அமர்வுக்கு மாற்றப்பட இருக்கிறது. மூன்றாவது நீதிபதி யார் என்பதைத் தீர்மானிக்க வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது இதனால் செந்தில் பாலாஜி விடுதலை செயப்படுவார் என எதிர்பார்த்து இருந்த திமுகவினருக்கும் குறிப்பாக முதல்வருக்கும் அதிர்ச்சி கிடைத்தது .இது ஒருபுறம் என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் MP MLA கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் விரைவில் செந்தில் பாலாஜியின் மீதான ஊழல் குற்றசாட்டு வழக்கில் களத்தில் இறங்கும் சூழல் உண்டாகி இருப்பதால் திரி சூழ வியூகத்தில் தற்போது செந்தில் பாலாஜியை நோக்கி இருக்கிறது போக்குவரத்து துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள்.
அதிக பட்சம் 10 நாட்கள் மட்டுமே செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் ஓய்வு எடுக்க முடியும் என்றும் அதன் பிறகு புழல் சிறை செந்தில் பாலாஜிக்காக கைதி எண் 1440 உடன் தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.