செந்தில் பாலாஜி விரைவில் ஜாமினில் வெளிவருவார் என திமுகவின் முக்கிய தலைமை எதிர்பார்த்து கொண்டு இருக்க,மிக பெரிய திருப்பமாக இன்று அமலாக்க துறை தெரிவித்த முக்கிய ஆதாரம் அமைந்து இருக்கிறது.
நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார்.
இந்தநிலையில் எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறப்பு நீதிமன்றமே செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்கும் என்று கூறி நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டதுடன் வழக்கை தள்ளுபடி செய்தார்.இதனை தொடர்ந்து உடனடியாக அங்கு இருந்து கிளம்பிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி முறையிட்டனர்.
அப்போது நீதிபதி ரவி, “இந்த வழக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வருவதால் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றம் ஒருவேளை ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியும்” என்று தெரிவித்ததுடன் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு போட்டார்.
உடனடியாக உயர் நீதிமன்றத்தை அணுக செந்தில் பாலாஜி தரப்பு தயாராகி கொண்டு இருந்த வேலையில் செந்தில் பாலாஜி தலையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவினரும் அதிரும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நீதிமன்றத்தில் அமலாக்கதுறை தாக்கல் செய்த 3000 பக்கம் கொண்ட குற்ற பத்திரிகையில் செந்தில் பாலாஜி மோசடியாக பணிக்கு ஆட்களை தேர்வு செய்ததும் அதற்கான ஆதாரமான பெண் டிரைவ் இருப்பதும் அதில் இன்னும் பல விஷயங்கள் இருப்பதாகவும் அமலாக்கதுறை தெரிவித்து இருக்கிறது.
அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல ஆதாரங்களை திரட்டி இருப்பதாகவும் அமலாக்கதுறை தெரிவித்து இருக்கிறது. இதனால் செந்தில் பாலாஜி பல மாதங்கள் கழித்தாலும் ஜாமினில் வெளிவர முடியாது என அடித்து கூறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறதாம்செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு.
பெண் டிரைவில் இன்னும் பல விஷயங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்க துறை தெரிவித்து இருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை மட்டுமின்றி பல அரசு அதிகாரிகளையும் அதிர செய்து இருக்கிறதாம்.