24 special

சீமானுக்கு வைக்கப்பட்ட குறி....! பின்னணியில் சதி வேலையா....!

seeman, vijayalakshmi
seeman, vijayalakshmi

தமிழக அரசியலில் தற்போது ஒரு திடுக்கிடும் சர்ச்சையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எழுந்துள்ளது. தமிழில் ஃபிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி, செய்தியாளர்கள் மத்தியில் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக பகிரங்க தகவலை தெரிவித்தார். இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்திடமும் புகார் அளித்துள்ளார்.


மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை ஏமாற்றியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளதாகவும் அந்த புகாரின் அடிப்படையில் பிரிவு 420 கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் வழக்கு பதியப்பட்டவுடன் அப்போதைய நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தடா சந்திரசேகர் என்னிடம் சீமானுக்காக பேச்சுவார்த்தை நடத்தினார். 

தற்போது அவர் மறைந்து விட்டார் அந்த பேச்சுவார்த்தையில் ஊரறிய தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாகவும் கயல்விழியை துணைவியாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்து இருந்தார் அதன்படி இந்த வழக்கு தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன் ஆனால் சீமான் அந்த பேச்சுவார்த்தைகளில் கூறியது போன்று நடந்து கொள்ளவில்லை இதனால் தற்பொழுது 2011ஆம் ஆண்டு நிறுத்தி வைத்த வழக்கை மீண்டும் தொடர வேண்டும் என்று காவல் நிலையத்திடம் புகார் அளித்துள்ளேன், இந்த முறையாவது எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் அதனால் தற்போது இருக்கும் அரசு இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த வழக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமே நான் வாழ்வதா சாவதா என்பது தெரியும் என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். 

இந்த நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் விஜயலட்சுமி தனது ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீரலட்சுமி உடன் இருந்தது வேறு இதில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது தமிழர் முன்னேற்ற படையின் நிறுவன தலைவராக உள்ள வீரலட்சுமி 2021 ஆம் ஆண்டு விஜயலட்சுமி முன் வைத்த புகார்களுக்கு ஆதரவாக வீரலட்சுமி களம் இறங்கியுள்ளார். மேலும் தற்போது போலீஸ்சிடம் விஜயலட்சுமி புகார் கொடுக்க சென்ற பொழுதும் வீரலட்சுமி உடன் இருந்தது சில அரசியல் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. 

குறிப்பாக இந்த வீரலட்சுமி ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் போது ரஜினியை அரசியலுக்கு வர விடமாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், இவருக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் அரசியல் குறித்த செய்திகள் வெளிவந்த போது விஜய் அரசியலுக்கு வருகையை விமர்சனம் செய்து விஜய்க்கு எதிராகவும் பொங்கினார். 

அது மட்டுமில்லாது கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவிற்கு எதிரான ஊழல் பட்டியல்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று ஒரு வீடியோவை வெளியிட்டு பகிர் கிளப்பினார். இப்படி தொடர்ச்சியாக அரசியலில் ரஜினி, விஜய், பாஜக என அனைவரையும் எதிர்த்து வருகின்ற வீரலட்சுமியுடன் நடிகை விஜயலட்சுமி கைகோர்த்து சீமானுக்கு எதிராக புகார்களை கிளப்பி செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்ததற்கு பின்னணியில் சீமானை சிக்க வைக்கப்பட்ட சதியாக இருக்கலாம் என்று இணையதளத்தில் செய்திகள் பறக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்கள் மத்தியில் விஜயலட்சுமி என்ன புகார்களை முன்வைக்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என அனைத்தையும் வீரலட்சுமி ஆலோசனை கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது சீமானின் அரசியல் முன்னேற்றத்தை தடுக்க சதி என நாம் தமிழர் கட்சியினர் கூறி வருகின்றனர்.