24 special

அண்ணாமலைக்கு "எச்சரிக்கை" விடுத்த பாரதிக்கு பழசை நியாபக படுத்திய எழுத்தாளர்!

annamalai and stallin
annamalai and stallin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட நிலை உண்டாகும் எனவும் பழைய திமுக காரனை பார்ப்பீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்த ஆர். எஸ். பாரதி கருத்தை சுட்டிகாட்டி கருத்து தெரிவித்துள்ளார் எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


நல்லவேளை,திமுக இதையெல்லாம் வெள்ளையடித்து வைத்துள்ளார்களே..இதை எடுத்துப் பேசக்கூட ஆள் இல்லையே என்று எப்போதும் நினைப்பேன்..ஆனால் RSB போன்றவர்கள் பல புண்ணிய காரியங்களை இது போல செய்வது வரவேற்கத்தக்கது.

திராவிட நாத்திக பிரச்சாரத்தை எதிர்த்து,ஞானவாள் ஏந்தி தனி ஒருவனாக அன்று யுத்தம் புரிந்தவர்  கிருபானந்த வாரியார் சுவாமிகள்.இந்த திராவிட கூட்டம் பெரியார் தொடங்கி அனைவரையும் அவரை இழிவு செய்தார்கள்,இழித்து எழுதினார்கள்,அவருடைய கூட்டங்களில் புகுந்து கலாட்டா செய்தார்கள்..

ஒருமுறை பலநூறு பேர் அவர் சூழ்ந்து கொண்டு,அவர் தன் கையோடு கொண்டு போகும் பூஜாமூர்த்தியான முருகப்பெருமான் சிலைகளை சேதப்படுத்தி அவரை தாக்க முயன்றனர் என்று அவரே பதிய வைத்துள்ளார்.அண்ணா சிகிச்சையின் போது வாரியார் சுவாமிகள் ஏதோ பேசிவிட்டார் என அவர்மீது கொடூர தாக்குதல் நடத்த ரவுடி கூட்டத்தை கட்டவிழ்த்துவிட்டது வரலாறு..அண்ணாவை பேசினால் இதுதான் நடக்குமென்று வீராவேசம் பேசினார்கள்.

இதையெல்லாம் இன்று மறந்துவிட்டு,நாங்கள் வாரியார் சுவாமிகளின் வாரிசு என்று சொல்லும் சொற்பொழிவு கூட்டமொன்று இவர்களை அண்டிப் பிழைக்கிறது என்பது துரதிர்ஷ்டம்..வாரியார் சுவாமிகள் திராவிட கருத்தியலுக்கு எதிராக புரிகிற விதம் மக்களிடம் பேசி அவர்களை நல்ல பாரதியர்களாக,பண்பாடு மிக்கவர்களாக வாழ பிரச்சாரம் செய்தார்.

அந்த நற்செய்திகள் மக்களிடம் எடுபட்டது,இதை பிடிக்காமல் எப்படி தாக்குதல் நடத்தினோமோ? அதே போல அண்ணாமலைக்கும் நடக்கும் என்று மிரட்டும் போதே,இவருடைய வீச்சு மக்களிடம் எப்படியுள்ளதென தெரிந்துவிட்டது.இது அந்தக் காலமல்ல,அண்ணாமலை நீங்கள் நினைக்கும் ஆளுமல்ல என்று குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.