24 special

இந்தியா அடித்த அடி நரகமாகும் கராச்சி முடங்கியது பாகிஸ்தான் அலறும் வணிகத் தலைநகரம் கதறும் பாகிஸ்தானியர்கள்

PMMODI,SHEHBAZ SHARIF
PMMODI,SHEHBAZ SHARIF

இந்தியா அடித்த அடியில் பாகிஸ்தானின் முதுகெலும்பாகவும், அந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூணாகவும் விளங்கும் கராச்சி நகரம், இன்று வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.தலைநகரம் இஸ்லாமாபாத்தாக இருந்தாலும், பாகிஸ்தானுக்குச் சாப்பாடு போடும் அச்சாணி கராச்சிதான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், இன்று அதே கராச்சியில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு சொட்டுத் தண்ணீருக்கும், ஒரு யூனிட் மின்சாரத்திற்கும், சமைப்பதற்கான எரிவாயுவிற்கும் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.


50 டிகிரி செல்சியஸை நெருங்கும் சுட்டெரிக்கும் கோடை வெயிலில், மின்சாரமும் இல்லாமல், குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் ஒட்டுமொத்த நகரமே நரகமாக மாறிக் கிடக்கிறது. கராச்சியின் வடகிழக்கு நீரேற்ற நிலையத்தின் பிரதான மின் கேபிளில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு, ஒட்டுமொத்த விநியோகக் கட்டமைப்பையும் தரைமட்டமாக்கிவிட்டது. தினமும் 5.4 கோடி கேலன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. மாற்று ஏற்பாடுகள் என்று பாகிஸ்தான் அரசு செய்யும் கண்துடைப்பு வேலைகள் எதுவும் மக்களின் தாகத்தைத் தீர்க்கவில்லை. தண்ணீர் லாரிகளின் விலையோ விண்ணைத் தொடுகிறது. காசுள்ளவன் மட்டுமே தண்ணீர் குடிக்க முடியும் என்ற நிலைக்குப் பாகிஸ்தானின் வணிகத் தலைநகரம் தள்ளப்பட்டுள்ளது.

நிர்வாகச் சீர்கேட்டின் உச்சக்கட்டமாக, மக்கள் கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். எந்த நேரத்திலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கலாம் என்று அதிகாரிகளே அச்சப்படும் அளவிற்கு நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது.இப்படி உள்நாட்டுக் குழப்பங்களிலும், நிர்வாகத் திறமையின்மையிலும் பாகிஸ்தான் முழுமையாகச் சிக்குண்டு, திக்கற்றுத் திணறிக்கொண்டிருக்கும் இதே வேளையில்தான், இந்தியா தனது விஸ்வரூப ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக, தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நீர் மேலாண்மையிலும், பொருளாதாரத்திலும் ஒரு மரண பயத்தை உலுப்பியுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் இறங்கி வரப்போவதில்லை; இனி இந்தியா அடங்கவும் மறுக்கும்" என்று பாகிஸ்தானியர்களே இன்று அலறத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கும், துரோகங்களுக்கும் பாகிஸ்தான் செய்த வினைகளுக்கான அறுவடையைத்தான் இப்போது இந்தியா அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறது என்பது பாகிஸ்தானுக்கே நன்றாகத் தெரியும்.

அடிப்படை உட்கட்டமைப்பைக் கூடப் பராமரிக்கத் தெரியாமல் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவின் இந்த ராஜதந்திர ‘ஆதி’ ஒரு சாட்டையடி. இத்தனை காலம் பொறுமையாக இருந்த இந்தியா, இனி ஒரு அணுவும் நகராது என்பதில் காட்டும் பிடிவாதம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்குப் புத்தி புகட்ட இதே அதிரடி நிலைப்பாட்டில் இந்தியா என்றும் நீடிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தேசத்தின் முழக்கமாக இருக்கிறது.