இந்தியா : 1960களில் இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போடப்பட்ட சிந்துநதி நீர் ஒப்பந்தப்படி தனது பங்குகளை காங்கிரஸ் அரசு பயன்படுத்தாமலேயே வைத்திருந்தது. பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் கையை நேரு எதிர்பார்த்து கைகட்டிக்கொண்டு நின்றதே பல பிரச்சினைகளுக்கு அடிகோலியதுடன் உலக அளவில் இந்தியா வல்லரசுகளை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை தற்போது மோடி அரசு முழுமையாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஹிமாசலப்பிரதேச பகுதிகளில் 6.8ஜிகாவாட் தொகுப்பு மதிப்பில் பத்து நீர்மின்திட்டங்களை இந்தியா உருவாக்கிவருகிறது. மத்திய அரசின் NHPC லிமிடெட் மூலம் 68000 கோடி முதலீட்டில் தொடங்கியிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு பாயும் அபரிமிதமான நீரை தடுக்கும் ஒரு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே உருவாகிவரும் சீன பொருளாதார வழித்தடங்களுக்கு இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்படும். மேலும் சிந்து நதி மீதான தனது கட்டுப்பாட்டை இந்தியா அதிகரித்துக்கொள்ளும். மேலும் இந்தியா தனது கிழக்கு எல்லைகளில் இதேபோல ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்து பிரம்மபுத்திரா நதியிலிருந்து பாயும் நீரை சீனாவிற்குள் திருப்பிவிடும் திட்டத்தை இந்தியா முறியடிக்க உள்ளது.
பிரம்மபுத்திரா நதிநீரை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமிப்பதை தடுக்க அருணாச்சலப்பிரதேச மாநிலம் யிங்கியோங்கில் தேசத்தின் இரண்டாவது பெரிய அணையை கட்ட இந்தியா நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 1000 மெகாவாட் பகல் துல் திட்டம்,850 மெகாவாட் ரேட்டில் திட்டம், 540 மெகாவாட் குவார் திட்டம் 624 மெகாவாட் கிரு திட்டம் பொதுத்துறை நிறுவனத்தால் கட்டப்பட்டு வருவதாக NHPC நிர்வாக இயக்குனர் அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இந்த திட்டங்களை தொடர்ந்து எதிர்த்துவந்தாலும் நம்மிடம் சிந்துநதிநீர் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிஷன்கங்கா, உரி மற்றும் பிற திட்டங்களை உருவாக்கியுள்ளோம். சிந்துநதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலில் யார் திட்டத்தை உருவாக்குகிறாரோ அவர்களுக்கே முதல் உரிமை உண்டு" என அபாய குமார் சிங் தெரிவித்துள்ளார்.
1960களில் இந்தியாவின் திட்டங்களை ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் எதிர்த்து வழக்கு தொடுத்தது. ஆனால் அந்த வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.