புதுதில்லி : சாட்சிகளை விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்திருப்பது உச்சநீதிமன்றத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே திகைப்புக்குள்ளாகியிருக்கிறது. நீதி நேர்மை நியாயம், கடமை என மூச்சுக்கு முன்னூறு தரம் அறிவுரை வழங்கிவரும் நீதியரசர்களின் இந்த செயல் வியப்புக்குரியதாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிஹார் மாநிலம் பெகுசராய் நீதிமன்றத்தில் 2015 ல் நடைபெற்ற ஒரு வழக்கில் சாட்சிகள் யாரையும் விசாரணை செய்யாமல் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டுமனுவை 2018ல் பாட்னா உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது " மனுதாரர் சார்பில் இந்த வழக்கில் சாட்சியளிக்க எந்த ஒரு நோட்டீஸோ அல்லது வேறு நடைமுறையோ பின்பற்றப்படவில்லை.
கீழ்நீதிமணிப்பிடற பதிவுகளின்படி தகவல் அளித்தவர் மற்றும் அரசுத்தரப்பு சாட்சிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அறிக்கை எங்குமே காணப்படவில்லை. விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட செயல்முறை குறித்தா பதிவு ஆவணங்களும் இல்லை. வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிடுகிறோம்" என பாட்னா உயர்நீதிமன்றம் 2018ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திர சூட் மற்றும் திரிவேதி அடங்கிய விடுமுறைகால பெஞ்ச் " உங்கள் மனசாட்சியை அதிர்ச்சியடைய செய்யவில்லையா. பிஹார் போன்ற மாநிலங்களில் இன்றும் இப்படித்தான் நடக்கிறது என்பது திகைப்பூட்டுகிறது. நேர்மையாக இருக்கவேண்டும்.
அரசியலமைப்பின் 136 ஆவது பிரிவின்கீழ் சிறப்பு விடுப்பு மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது. பாட்னா உயர்நீதிமன்றதிர்ப்பை எதிர்க்கும் இந்த மனுவை நாங்கள் ரத்துசெய்கிறோம்" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சாட்சிகளையே விசாரிக்காமல் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுத்துள்ள சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.