24 special

இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது....!வெற்றி பெற்றார் மோடி...!

Mkstalin
Mkstalin

உலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என சீனா பல நாட்களாக பணிகளை பல்வேறு வழிகளில் செய்து வருகிறது, அதில் சீனாவின் மிக பெரிய கனவு திட்டங்களில் முதன்மை யானது பட்டு பாதை திட்டம், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் உலகம் சீனாவின் கைகளுக்கு சென்று சேரும் என பல யூகங்கள் சொல்லப்பட்டது.பிரதமர் மோடி சீனாவிடம் தோற்று விட்டார் என இந்தியாவில் உள்ள ஊடகங்கள் சில வெளிப்படையாக எழுதினர் இந்த நிலையில் தான் G20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை கொண்டே முடிவுரை எழுதப்பட்டு இருக்கிறது.


ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஆசியாவை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்க பெல்ட் அன்ட் ரோடு திட்டம் செயல்படுத்தப்படும் என சீனா அறிவித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இத்தாலி மட்டுமே கடந்த 2004-ம் ஆண்டு பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது. இந்த சூழ்நிலையில், சீனாவுடனான பிஆர்ஐ ஒப்பந்தம், எங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலி வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். இதுபோல, பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அவ்வப்போது கூறி வந்தார்.பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுகிறோம்: சீன பிரதமரிடம் தெரிவித்தார் இத்தாலி பிரதமர் மெலோனி

இந்த சூழ்நிலையில், ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் சீனா சார்பில் அந்நாட்டு பிரதமர் லி கியாங் பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு நடுவே லி கியாங்கும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியும் சந்தித்துப் பேசினர். அப்போது, பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக மெலோனி தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கியாங் விடுத்த வேண்டுகோளை ஏற்க மெலோனி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் 3-வது கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், இத்தாலியின் இந்த முடிவு ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுபோல பிஆர்ஐ திட்டத்திலிருந்து விலக மேலும் சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது சீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது இதற்கு இந்தியா தான் முக்கிய காரணம் என ஒரு பக்கம் புலம்பி வருகிறது சீன ஊடகங்கள்.

இது ஒருபுறம் என்றால் மோடி எதிர்பாளர்கள் கதறும் வண்ணம் மற்றொரு சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது.பொதுவாக சர்வதேச மாநாடுகளில் அமெரிக்க அதிபரே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைவிட இந்திய பிரதமர் மோடியே ஆதிக்கம் செலுத்தினார்.உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.

 ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ரஷ்யாவுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தமுறை டெல்லி பிரகடனத்தில் ரஷ்யாவின் பெயர் இடம்பெறாமல் தடுத்து, அதேநேரம் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் புதிய ரயில், கப்பல் போக்குவரத்து வழித்தட திட்டமும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, சீனாவை ஓரம்கட்டியது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்திருக்கிறது" என்று சர்வதேச ஊடகங்கள்  மோடிக்கும் புகழாரம் சூட்டியுள்ளன இது சர்வதேச அளவில் மோடியின் இமேஜ் உயர்த்தி இருப்பதால் மோடி எதிர்பாலர்கள் கதறி வருகிறார்கள்.