2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாகும், இதனால் குடும்ப தலைவிகள் பெரிதும் கவரப்பட்டு இந்த வாக்குறுதி காகவே திமுகவிற்கு ஓட்டு அளித்தார்கள் என்று கூறலாம். அதற்கு பிறகு திமுக ஆட்சி அமைத்து அடுத்த தேர்தலே வரப்போகிறது ஆனால் இதுவரையும் மகளிருக்கான உரிமை தொகை கிடைக்கவில்லை. சமீபத்தில் இதற்கான கேள்விகளும் ஏன் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றினீர்கள் என்று ஆதங்கமும் மக்கள் மத்தியில் பிறந்ததை அடுத்து தகுதியுடைய சில மகளிருக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்று தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது அதற்கும் திமுக ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே இந்த தொகை சேர வேண்டும் என்பது எங்களது நோக்கம் என்று கூறி சமாளித்தது.
பிறகு நியாயவிலை கடைகள் மூலமாக ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் மகளிரிடம் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டது. ஒரு வழியாக வாக்குறுதியை அவர்கள் ஆட்சிக் காலத்தின் இறுதியிலாவது நிறைவேற்றினார்களே என்று மக்கள் ஆர்வமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து வந்த நிலையில் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் இந்த பணம் கிடைக்காது என்ற தகவல் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்காக திமுக வரையறை நிர்ணயித்த பொழுதே ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது, நன்செய் நிலம் ஐந்து ஏக்கருக்கு மேலும் புஞ்சை நிலம் 10 ஏக்கருக்கு மேலும் இருக்கக்கூடாது, சொந்தமாக நான்கு சக்கர வாகனம் அல்லது கனரக வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது, அரசு ஊழியர் ஆகவோ ஓய்வூதியம் பெறுபவராகவோ அரசிடமிருந்து வேறு ஏதேனும் உதவித்தொகை பெறுபவராகவோ இருக்கக் கூடாது, சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற பல நிபந்தனைகளை விதித்தது இவை அனைத்தையும் தாண்டி இந்த திட்டத்தின் மூலம் பணம் பெறுவதற்காக 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இப்படி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 5 லட்சம் பேருடைய விண்ணப்பங்களை நிராகரிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் திட்டத்தில் ஒரு கோடி பேருக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும் தகுதி உள்ள அனைவருக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் தற்பொழுது நிபந்தனைகளுக்கு உட்படாத 5 லட்சம் விண்ணப்பங்களை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே அறிவித்துவிட்டு கொடுக்கப்படுவதும் தாமதமாகியுள்ளது அதிலும் அன்று அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என்று கூறி இன்று தகுதியுடையவர்கள் என்று மாற்றியது இந்த நிலையில் ஐந்து லட்சம் பேருடைய விண்ணப்பங்கள் நிராகரித்தால் அது அப்படியே திமுகவிற்கு எதிரான வாக்கு வங்கியாக மாறும் அதுவும் இவர்கள் எல்லாம் பெண்கள்!
குறிப்பாக ஒரு பகுதியில் வசிக்கும் ஒரு சிலருக்கு கிடைத்து விட்டு ஒரு சிலருக்கு கிடைக்காமல் இருந்தால் அவர்கள் குடும்பம் மொத்தமும் திமுகவிற்கு வாக்களிக்காமல் போகின்ற நிலைமை ஏற்படும் ஐந்து லட்சம் பேர் என்றால் குடும்ப வாக்குகளை அனைத்தையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் கண்டிப்பாக அது 25 முதல் 30 லட்சம் வரை இருக்கலாம் திமுக வாக்கு வங்கியில் இது மிகப்பெரிய சதவீதமாகும் தேவையில்லாமல் வெறுப்பை சம்பாதித்து வரும் திமுக இந்த உரிமை தொகை விவகாரத்திலும் மிகப்பெரிய வெறுப்பை மக்கள் மத்தியில் சம்பாதித்து மரண அடியை வாங்க போகிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.