24 special

போதும் போதும் லிஸ்ட் பெருசாகியிட்டே போகுதே...! சிக்கப்போகும் திமுக அமைச்சர்களின் புதிய பட்டியல்...!

Mkstalin
Mkstalin

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி பொன்முடி ஜெகத்ரட்சகன் ஆகியோர் வழக்குகளை தற்போது நீதிமன்றங்களில் சட்டப் பிரச்சனைகளில் சிக்கி உள்ளனர் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அடுத்து யார் திமுகவிலிருந்து வழக்குகளில் சிக்குவார்கள் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அடுத்ததாக திமுகவைச் சேர்ந்த ஒரு அமைச்சர் சிக்கப்போவதில்லை மொத்தமாக கூண்டோடு சிக்கப் போகின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி அறிவாலய தரப்பிற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 


அதாவது திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களில் இரண்டு மூன்று பேர் அடுத்து சட்டப் பிரச்சனைகளில் சிக்கப்போவதில்லை கிட்டத்தட்ட 11 பேர் சட்ட பிரச்சனைகளில் சிக்க உள்ளனர் என்று அண்ணாமலை பகிரங்க தகவலை தெரிவிக்கும் வகையில் பெரிய லிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார். 

அண்ணாமலை தற்போது தனது இரண்டாம் கட்ட நடை பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார் அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நடை பயணத்தை முடித்து மக்களிடம் உரையாற்றிய பொழுதும் அரசியல் களத்தில் நடைபெறும் ஒரு செயலை கூட கவனிக்காமல் அவர் தவற விடுவதில்லை, அந்த வகையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போடி, வருஷநாடு, பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடி நடக்கிறது. கேரளாவில் இருந்து வியாபாரிகள் கொள்முதலுக்காக தேனி மாவட்டத்திற்கு அதிகளவில் வருகை தரும் சிறப்பு பெற்றது.1952ஆம் ஆண்டு இந்த பெரியகுளம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்றவர் கல்வி தந்தை மூக்கையா தேவர் அவர்கள். ஆனால் அவர் அலங்கரித்த சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தற்போது, திமுக வை சேர்ந்த K சரவண குமார் உள்ளார். இவர் மீது IPC SEC 171E லஞ்சம் வாங்கியதற்காக திருநெல்வேலி மூலக்கரைபட்டி காவல் நிலையத்தில் FIR உள்ளது. மூக்கையா தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில், இன்று ஒரு ஊழல்வாதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 

தமிழகத்தில் அமைச்சர்களாக இருக்கும்  துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி, MRK பன்னீர்செல்வம், KKSSR ராமசந்திரன், தங்கம் தென்னரசு, S ரகுபதி, KR பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் என 11 பேர் மீது ஊழல் புகார் உள்ளது. இவர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளனர் என்று திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சட்ட வழக்குகளில் சிக்க உள்ள பட்டியலை வெளியிட்டார். 

இப்படி அண்ணாமலை புகார்களில் சிக்கி உள்ள திமுக அமைச்சர்களின் பட்டியல்களை வெளியிட்டது அறிவாலய வட்டாரத்தை பதபதைக்க வைத்துள்ளது, காரணம் கடந்த ஆண்டே செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறையின் ரெய்டு வரும், அவர் சிறை செல்வார் என்று கூறினார். அண்ணாமலை இப்படி கூறி ஒரு வருடம் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள்ளாகவே செந்தில் பாலாஜி புழல் சிறைவாசத்தை பெற்று வருகிறார். 

தற்பொழுது அண்ணாமலை தனது யாத்திரையின் பொழுது பிற அமைச்சர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்கள் அனைவரும் புழல் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்று கூறியது பதட்டத்தை ஏற்படுத்தியதோடு அதற்கு ஏற்றார் போல் அமைச்சர் பொன்முடி, கே கே எஸ் எஸ் ஆர் மற்றும் ஐ பெரியசாமி போன்றோரின் வழக்குகள் தூசி தட்டப்பட்டு வேகம் எடுத்துள்ளது. இப்படி அண்ணாமலை கூறுவதற்கும் திமுக மீதாக எடுக்கப்படும் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்குமோ இதனால் தற்பொழுது கூறியதும் நடந்து விடுமோ என்ற அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது இது அறிவாலயத்தை மேலும் பதைபதைக்க வைத்துள்ளது.