24 special

திமுகா அரசின் மெத்தனம் ....! நாறும் வேங்கைவயல் விவகாரம்

Stalin
Stalin

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் திமுக அரசின் சமூகநீதி நாடகத்தை நாறடித்துவருகிறது.கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அன்னவாசல் ஒன்றியத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ளூர் சமூக பிரச்னை காரணமாக மனித மலம் கலக்கப்பட்டு பிரச்சனை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். 


இதுபற்றிய புகாரில் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திமுக அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வேங்கைவயல் கிராம மக்கள் போலீசார் குற்றத்தை எங்களையே ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முன்பு புகார் தெரிவித்தனர். திமுக அரசின் சமூகநீதி பித்தலாட்டம் அப்பொழுதான் அந்த பட்டியலின மக்களுக்கு கொஞ்சம் புலப்பட துவங்கியது.

மேலும் டெல்லியில் இருந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வேங்கைவயல் சம்பவம் நடந்து 3 மாதம் ஆகிறதே என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியை, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியும் அசைவற்று கிடந்தது சமூகநீதி காவலர் ஸ்டாலின் அரசின் நிர்வாகம், நல்லா இருக்குப்பா உங்க சமூகநீதி என பட்டியலின மக்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள்.  

மேலும் எதாவது சிறு விஷயம் என்றால் கூட கேமரா சகிதம் செல்பி எடுக்க கிளம்பிவிடும் முதல்வர் ஸ்டாலின் சம்பவம் நடந்து 3 மாதம் ஆகியும் அங்கு எட்டி கூட பார்க்கவில்லை, படவிழாக்களில் அழைப்பு வந்தால் முதலில் கிளம்பி செல்லும் அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வேங்கைவயல் சம்பவத்திற்கு கண்டன பதிவு கூட செய்யாமல் கண்டும் காணாமல் இருந்தார். இதுதான் திமுக சமூக நீதியா என மீதமுள்ள மக்களுக்கும் விளங்கியது.

சம்பவம் நடந்து இதுவரை 112 பேரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். இருப்பினும் கூட யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த விசாரணையின்போது குடிநீர் தொட்டியில் மலம் கலந்த உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையை கண்டறிந்து குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் 3 மாதமாக தடுமாறுவதாக தற்பொழுது கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறிய தகவலின் அடிப்படையிலும், உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை தொடர்பாக விரைவில் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் அனுமதி பெற்று அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்பட இருப்பதாக தற்சமயம் வரை தகவல், இதுதான் உங்க சமூகநீதி அரசா என முதல்வர் ஸ்டாலினை கேள்வி கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டது வேங்கைவயல் விவகாரம். வழக்கம் போல் முதல்வர் அடுத்த செல்பி எங்கே எடுக்கலாம் என யோசித்து வருகிறார்.