24 special

பாஜகவை புறக்கணித்த ....! எடப்பாடிக்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி

Edapadi
Edapadi

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் போய்விடும் என்று பாஜகவை முன்னிலைப்படுத்தாமல் பல இடங்களில் அதிமுகவினர் புறக்கணிப்பதாக பல்வேறு செய்திகள் வெளியானது.


மேலும் பாஜக தலைவர்கள் படம் கூட இடம்பெறாமல் பேனரை வைத்து சர்ச்சையை கிளப்பினார் எடப்பாடி பழனிசாமி, இந்த சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் முதல் மூன்று சுற்றுகளின் முடிவுகளில் இருந்தே தேர்தல் கள நிலவரம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு கண் கூடாக காட்டி இருக்கிறது. அதிலும் எந்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் போய்விடும் என்று பாஜகவினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு புறக்கணித்தார்களோ அந்த இடங்களில் அதிமுக வாங்கிய வாக்குகள் நிலவரம் கடும் அதிர்ச்சியை அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து இருக்கிறது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகின.பல்வேறு சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான வாக்குகளை பெற்று வருகிறார் இதன் மூலம் அதிமுக வேட்பாளர் டெபாசிட் பெறுவது என்பதே கேள்வி குறியாக இருக்கிறது.

தொடர்ச்சியாக போதுவேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்திக்கலாம் என பாஜக எடப்பாடியிடம் பல முறை கூறிய பின்பும் எந்த தலைவர்களின் பேச்சை கேட்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது எடப்பாடி தரப்பு தற்போது ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் திமுகவிற்கு இணையாக அனைத்து மட்டத்தில் இறங்கியும் தேர்தலை எதிர்கொண்டும் நாம் தமிழர் கட்சியுடன் போட்டி போடும் நிலைக்கு அதிமுக வந்து இருப்பது அதிமுகவின் தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இந்தியா முழுமைக்கும் அதிமுகவை எடுத்து சென்றவர் ஜெயலலிதா இன்று எடப்பாடி பழனிசாமி பலமான கொங்கு மண்டலத்தில் கூட நாம் தமிழர் கட்சியுடன் போட்டி போடும் நிலைக்கு அதிமுகவை கொண்டு வந்து இருப்பது இதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையா என்பதை கேள்வி எழுப்பி இருக்கிறது.கொங்கு மண்டலத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இந்த நிலை என்றால் தென் தமிழகத்தில் இடைத்தேர்தல் வந்து இருந்தால் 5 ஆயிரம் வாக்குகளை கூட அதிமுக பெற்று இருக்குமா என்ற கேள்வியை மக்கள் மத்தியிலும் உண்டாக்கி இருக்கிறது.