Cinema

விஜய்க்கு பெருகி வரும் ஆதரவு... இது நம்ம சினிமா பிரபலங்களா..?

Samuthirakani, Vijay
Samuthirakani, Vijay

நடிகர் விஜிய தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு  கிடைத்தாலும் அதன் பிறகு அவர் குறித்து யாரும் பெரியதாக பேசப்படவில்லை. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் விஜயை பெரியதாக நினைத்து கொண்ண்டு பேசுவதில்லை. ஆனால், சினிமா பிரபலங்களை எங்கு பார்த்தாலும் செய்தியாளர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அது எல்லாம் பொய் வேஷம் என சில தகவல் வந்த வண்ணம் உள்ளன. விஜய் அரசியல் என்பது அவரது அம்மாவை தவிர விஜயின் மனைவி, குழந்தைகள் என யாருக்கும் விருப்பம் இல்லை என ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது.


சினிமாவில் நடித்து வரும் விஜய் எப்போதும் தனக்கான ரோல் முடிந்தவுடன் கேரவான் உள்ளே சென்று விடுவாராம். வெளியில் வந்து என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டாராம்என சில நடிகர்களே கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய்யின் கோட் படம் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ரசிகர்களை தினமும் சந்தித்து வந்து புகைபடம் எடுத்து கொண்டு சென்றார். இதற்கு அரசியலில் விஜய் வந்ததன் காரணமாகவே விஜய் சந்தித்து இருக்கலாம் என சினிமா விமர்சகர்களால் கூறப்பட்டது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த ர்ஜுன் தாஸ், நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும், நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் கூறினார். அரசியல் கட்சி துவங்கிய பின்பு படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு முதலில் அதிர்ச்சி அடைந்த அர்ஜுன் தாஸ், அவர் மீண்டும் திரைப்படங்களை நடிப்பார் என நம்பிக்கை உள்ளது எனவும் அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள் என விஜயின் முடிவு என தெரிவித்தார்.

இதேப்போல் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி செய்தியாளர்கள் விஜய் அரசியல் குறித்த கேள்வியை வைத்தனர். இதற்கு பதிலளித்த விஜய் நல்ல மனிதர்கள் அரசியல் செய்ய வருகிறார். அவருக்கு எப்போதுமே எனது முழு ஆதரவு இருக்கும். தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.நடிகர் விஜய் உங்களை அரசியலுக்காக பிரச்சாரம் செய்ய அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு, அவர் என்னை கூப்பிடலன்னா கூட நல்ல விஷயத்துக்காக நானே முதலில் செல்வேன் என வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி. 

முன்னதாக நடிகை வாணி போஜனிடம் விஜய் குறித்த கேள்விக்கு விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறியிருந்தார். இப்படி சினிமா வட்டாரங்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவது விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் நல்ல விஷயமாக இருந்தாலும், வடிவேலுவிடம் இது குறித்த கேள்விக்கு அவ்ளோதான் என முடித்து விட்டு போனார் அப்போது விஜய் ரசிகர்கள் வடிவேலுவை சரமாரியாக தாக்கி பேசி வந்தனர். இணையத்திலும் வடிவேலுவை வைத்து ட்ரோல் செய்து வந்தனர். இதனை காரணமாக தான் சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என சில தகவல் வெளியானது.

ஒரு பக்கம் விஜய் சினிமாவில் இன்னும் ஒரு படத்தில் நடித்த பிறகு அரசியலில் முழுமையாக இறங்குவதாக தெரிவித்தார். 2026ம் ஆண்டு தழிழகத்தில் என்ன வேண்டுமானாலும் மாறலாம் ஒருவேளை மக்கள் விஜயை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் விஜய் மீண்டும் அவரது முடிவு மாற்றுவதர்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் அரசியலில் வந்தபிறகு சோபிக்கவில்லை அதன் காரணமாக அவர் மீடனும் சினிமாவில் இருந்து வருகிறார். அப்படி விஜய்யும் முடிவு எடுத்தால் விஜய் படத்தில் நடிக்க இப்போது ஆதரவு தெரிவித்தவர்கள் அப்போது அவர்களுக்கு அங்கு வாய்ப்பு கிடைக்கும் என் ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.