ஜம்முகாஷ்மீர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முஷாரஃப் ஆட்சின்போது நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கை எனும் பெயரில் பாகிஸ்தானில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரிகள் உள்பட பல பல்கலைக்கழகங்களில் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் பெரும் பயங்கரவாத ஊழல் நடந்திருப்பதை தற்போது உளவுத்துறை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
அதிலும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் கல்வியின் பெயரால் பயங்கரவாதம் மற்றும் ஊழல் செய்யப்பட்டது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மிக சமீபத்தில் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) மற்றும் அனைத்து இந்திய தொழில்நுட்பக்க கல்வி கவுன்சில் ஆகியவை பாகிஸ்தானில் பட்டம்பெற்ற மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு தகுதி பெறமாட்டார்கள் என அறிவித்திருந்தது.
ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்முகாஷ்மீரில் உருவாக்கப்பட்ட உளவுத்துறை அமைப்பான SIA பல பயங்கரவாத ஊழலை NIA வுடன் சேர்ந்து கண்டறிந்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கோ அல்லது பயங்கரவாதிகளின் உறவினர்களுக்கோ மருத்துவ சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டு வந்த ஏஜென்சி மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி என்ற பெயரில் அங்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பலகோடிரூபாய் பரிவர்த்தனையில் பிரிவினையாளர்கள் பெற்றுள்ளனர் என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குப்வாராவில் வசிக்கும் முகம்மது அப்துல்லா ஷா, அனந்தநாக்கில் உள்ள ஹாஜி, இரட்சிப்பு இயக்கத்தலைவர் மற்றும் பாத்திமா ஷா, அல்தாப் முஹம்மது,குல்போரா,நவ்காம் பகுதியை சேர்ந்த சப்சார் முஹம்மது, குப்வாராவில் உள்ள முஹம்மது ஷா சீனிசவுக்கில் வசிக்கும் முகம்மது இக்பால், காசி யாசிர் உள்ளிட்ட எட்டுப்பேர் மீது SIA வழக்கு பதிவுசெய்துள்ளது.
பாகிஸ்தானில் இதுபோன்ற கேள்விகளுக்கு ஏஜென்சி மூலம் விண்ணப்பிப்பதற்கு இவர்கள் போன்ற பலநெட்வொர்க்குகள் செயல்பட்டு வருவது டெல்லியில் அமைந்திருக்கும் மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய உளவுநிறுவனங்கள் மிக எச்சரிக்கையாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.