24 special

பாஜக "மெகா" திட்டத்தை செயல்படுத்த போகிறது? திமுக தலைமை அதிர்ச்சி!

stallin and modi
stallin and modi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் ஒரு புது வகையான போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும், இதுவரை தமிழகம் காணாத வகையில் அந்த போராட்ட வடிவம் இடம்பெறும் என்றும் இதற்கான முழுமையான அனுமதியை அக்கட்சியின் தேசிய தலைமையிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.


இது குறித்து TNNEWS24 க்கு கிடைத்த தகவலை பார்க்கலாம்.தமிழகத்தில் பாஜகவை எதை வைத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகள் குற்றசாட்டு வைக்கிறார்களோ அதனை நீர்த்து போகும் வண்ணம் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார், குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சனை என்பது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் துருப்பு சீட்டு, மத்திய அரசிற்கு எதிராக தேவைப்படும் நேரத்தில் இந்த அமைப்புகள் இலங்கை தமிழர் நலன் குறித்து பேசும்.

அதனை அண்ணாமலை தனது இலங்கை பயணம் மூலம் உடைத்து எரிந்து இருக்கிறார், இலங்கையில் உள்ள மக்கள் பாஜகவை குறிப்பாக பிரதமர் மோடியை நம்பி இருப்பதை வெளி உலகிற்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார், அதை காட்டிலும் இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர் ஒருவர் முதல்வராக வருவார் என்று அண்ணாமலை உறுதி அளித்து இருக்கிறார்.

இது ஒரு புறம் என்றால் தமிழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்காள் நினைவு நிகழ்ச்சியில் அண்ணாமலை குறித்து பழ. நெடுமாறன் பேசிய பேச்சு, இதுநாள் வரை தமிழ் தேசியம் பேசிய நபர்களை கூட அண்ணாமலை மீது பார்வையை திருப்ப திறவு கோளாக மாறியுள்ளது. இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அண்ணாமலையை முன்னிலை படுத்துவதாகவும், திமுக ஆட்சியில் உள்ள சில குறைகளை பெரிது படுத்தி காட்டுவதாகவும் பலர் திமுக தலைமையிடம் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஊடகங்களை இப்போதே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர், இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடு நாளுக்கு நாள் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது அவர்கள் கட்சிக்கே தெரியவந்துள்ளது, ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை, முதலில் வழிபாட்டு தளங்களை திறக்கவேண்டும் என போராட்டம் அறிவித்தார்கள் அதில் தொடங்கி திருவாரூரில் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்க கூடாது  என்ற விவாகரம் வரை அண்ணாமலை  சொல்வதுதான் நடக்கிறது.

போதாத குறைக்கு அமைச்சர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை இப்போது வருமான வரிதுறைக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ அண்ணாமலை பெயரை கேட்டால் பயம் கொள்கிறார்கள், சமீபத்தில் கூட பெரிய உயர் பொறுப்பில் இருக்க கூடிய அமைச்சர் ஏன் எனது வாயை பிடுங்குகிறீர்கள் என எஸ்கேப் ஆகிறார் இந்த அளவில் அண்ணாமலை செயல்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இப்படி இருக்கையில் இதே நிலை நீடித்தால் 2024 மக்களவை தேர்தலில் பாஜக சொல்லும்படியான வெற்றியை பெற்றுவிடும் எனவே அண்ணாமலையை இப்போதே தடுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் ஒரு அமைச்சர் நேரடியாக புலம்பி தீர்த்து இருக்கிறார், இந்த சூழலில்தான் பொறுங்கள் நீங்கள் நினைத்தது விரைவில் நடக்கும் என திமுக தலைமை அந்த அமைச்சரிடம் உறுதி அளித்து இருக்கிறது, அதாவது அண்ணாமலையை கைது செய்வதற்கும் திமுக தலைமை தயாராகி வருகிறதாம் இதற்கான நேரத்தையும் தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் பாஜகவிற்கு தெரியவந்துள்ளதாம் அதற்குள் மிக பெரிய போராட்டத்தை முன்னெடுக்க தமிழக பாஜக தயாராகி இருக்கிறதாம் தமிழகத்திற்கு புதிய சட்டமன்றம் கட்ட மகாபலிபுரம் அருகே இடம் தேர்வு செய்து இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது அப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் அதன் மூன்று நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் இருந்து மாவட்ட தலைவர்கள் மாநில முக்கிய நிர்வாகிகள் என ஒவ்வொருவரும் 10 ஆயிரம் நபர்களை சென்னைக்கு அழைத்து வரவேண்டும் எனவும்.

சென்னையில் மட்டும் சுமார் 10 லட்சம் பொதுமக்களை திரட்டி சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி நடை பயணம் முற்றுகை போராட்டம் கருப்பு பலூன் என அனைத்தையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறதாம் பாஜக தலைமை. பிரதமர் மோடி இராணுவ உற்பத்தி மையத்தை திறக்க சென்னை வந்தபோது அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக எது போன்ற ஒரு எதிர்ப்பை உருவாக்கியதோ அதனை காட்டிலும் மிக பெரும் போராட்டத்தை நடத்த தமிழக பாஜக தயாராகி விட்டதாம்.

அண்ணாமலையை கைது செய்தால் அது இப்போது அண்ணாமலைக்கு இருக்கும் மக்கள் ஆதரவை காட்டிலும் பெரும் பங்கு ஆதரவை அண்ணாமலைக்கு கொடுக்கும் என்பதால் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் தலைநகரில் நடக்க போவதாக கூறப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்த என்ன முடிவு எடுக்க போகிறது ஆளும் கட்சி என்பதே இப்போதைய கேள்வி பதிலாக உள்ளது.