![Mahua Moitra,congress](https://www.tnnews24air.com/storage/gallery/uz2TVl29K7IngZumjlDQDxvQja6If0PIA12UCvvz.jpg)
மஹீவா மொய்த்ரா மேற்கு வங்கத்தின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி! இவர் குறித்த சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக வெளியாகி இருந்தது. அதாவது மக்களவையில் இவர் எழுப்பிய 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பான கேள்விகளாகும் அந்த கேள்விகளை இவருக்கு பதில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தினி தான் கேட்டுள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபணம் ஆனது. இன்னும் தெளிவாக கூறினால் மக்களவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் கேள்வியை முன் வைப்பதற்கு உரிய ஐடி மற்றும் பாஸ்வேர்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவை அந்த மக்களவை உறுப்பினருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும் ஆனால் இதனை காங்கிரஸ் எம்பி மஹிவா துபாயில் இருந்த தொழிலதிபர் ஹிராநந்தானிக்கு வழங்கி அவர் மூலம் மக்களவையில் அதானி குழுமத்திற்கு எதிரான 50 கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதற்காக அவர் இரண்டு கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார் என பாஜக எம் பி நிஷிகாந்த் தூபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். அதுமட்டுமின்றி இந்த ரகசியத்தை மொய்த்ராவின் முன்னால் காதலரான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் முதலில் அம்பலப்படுத்தி உள்ளார் அதனை ஆதாரமாக வைத்தே பாஜக mp நிஷிகாந்த் தூபே இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து நாடாளுமன்ற நெறிமுறைக் குழு இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு மொய்த்ரா செய்த குற்றம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டது மேலும் இதில் மஹிவாவை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற நெறிமுறை குழு பரிந்துரை செய்தது. இதற்கிடையில் மஹிவா, நெறிமுறை குழு தலைவர் கேள்வி எழுப்புவதில் தவறு இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணைக்கு இடையிலேயே அங்கிருந்து சென்ற செய்தியும் பரபரப்பாக வெளியானது ஆனால் உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்ப்பதற்காகவே மகிவா இந்த நாடகத்தை ஆடி உள்ளதாக நெறிமுறை குழு தலைவர் மஹிவா மீது குற்றம் சுமத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து மகிவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் அதானி குடும்பத்திற்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றதை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையையும் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி வெளியிட்டது மேலும் அவரை பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்தது.
இதனை அடுத்து இந்த விவகாரத்தில் சிபிஐ லோக்பால் ஆணையம் தலையிட்டு நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் விசாரிப்பதற்கு கடந்த 15 ஆம் தேதி உத்தரவிட்டது, மேலும் லோக்பால் பிரிவு இது குறித்த விசாரணைகளை தீவிரப் படுத்தி ஆறு மாதத்திற்குள் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை விசாரணையின் நிலை குறித்து சிபிஐ அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் லோக்பால் ஆணையம் தனது உத்தரவை குறிப்பிட்டு இருந்தது. அதன்படியே தற்பொழுது நாடாளுமன்றத்தில் அதானி குழும்பத்திற்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பான விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொள்ள ஆரம்பித்தது அந்த வகையில் தற்பொழுது இதில் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்ற கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மகிவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் இந்த விவகாரம் தீவிரம் அடைந்து இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.