24 special

ஒரு ரூபாய் கிடையாது.. கோவை தேர்தலில் அண்ணாமலையின் பிளான்..!

Edapaadi palanisamy, Stalin, anamalai
Edapaadi palanisamy, Stalin, anamalai

அடுத்த மாதம் 19ம் தேதி லோக்சபா தொடங்க இருக்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளரை வெற்றி பெற தீவிர வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை கோவை தேர்தலில் ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவேன் என்று கூறியது எதிர்கட்சிகளிடம் கலக்கலத்தை எப்படுத்தியுள்ளது.


வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பாக இராமச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். பாஜக சார்பாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக, திமுக இரு கட்சிகளும் அண்ணாமலை வெற்றி பெறமாட்டார் என்றும் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த, மும்முன்னை போட்டியில் எப்படியாவது இரண்டு திராவிட கட்சிகளும் பணத்தை கொடுத்து மக்களை கவரும் எண்ணத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று டெல்லியில் இருந்து கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி உத்தரவிட்டதால் தான் கோவை தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறினார். அண்ணாமலை பேசுகையில், கோவையில் மும்முன்னை போட்டி என்பது கிடையாது 70 வருடங்களாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்துக்கும், மறுபுறம் தர்மத்துக்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும். நாங்கள் தயார். தமிழகத்தின் அரசின் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க வேண்டும்.

திமுக சொல்லும் வெத்து அறிக்கையெல்லாம் ஒரு போதும் சாத்தியமாகாது, அவர்களது அறிக்கையை எதற்கு பயன்படுத்தணுமோ அதற்கு தான் பயன்படுத்த வேண்டும். மோடி தமிழகம் அடிக்கடி வருவது 2026ல் பாஜக ஆட்சி அமைப்பதற்கான அடித்தளமே. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகளில் செய்ததை பொது மக்களிடம் கூறி ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.

தொடர்ந்து, கோவையில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுடன் எனக்கு சண்டை கிடையாது. பிரசாரத்தின்போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு, கோபாலபுரத்தோடு தான் என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது. கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். அவர்கள் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கிறோம்.

அண்ணாமலையயின் இந்த பேச்சு இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதிமுக, திமுக கட்சி வேட்பாளர்கள் மக்களிடம் பணத்தை வாரி கொடுத்து மீண்டும் பதவி வரும் நினைப்பில் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதில், அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க உள்ள வேட்பாளர்களில் குறைவான செலவில் வெற்றி பெறுவது நான் ஆகதான் இருப்பேன் என்று கூறியதும் மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்த நிலையில் பாஜக அதனை தனது வசம் கொண்டுள்ளது. இதனால், வரும் தேர்தலில் மக்கள் பாஜகவை தேர்தெடுக்க மக்கள் விரும்புகின்றனர், மேலும், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் நிச்சயம் பாஜக வெற்றி பெரும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

அண்ணாமலை பிரச்சாரத்தில் நிச்சயம் ஊழலை கொண்டு பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் போதைப்பொருள் விவகாரத்தையும் அதிமுக திமுக இரு கட்சிகளின் மணல் ஊழல் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் செய்து நிச்சயம் கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.