தமிழகத்தில் மலை பகுதியில் இருக்கும் கோவில்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மாமிச உணவுகள் கணினி மயமான பொருட்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சில தடைகள் உள்ளன. அதாவது திருப்பதி மலை புனிதமாக கருதப்படுவதால் மலைக்கு பீடி சிகரெட் மது மாமிசம் மற்றும் டிரோன் கேமராக்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதனிடையே, இந்தக் கோயிலுக்கு நீண்டகாலமாகவே தீவிரவாதிகளிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுதொடர்பாக தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வோர் அனைவரையும் தீவிர கண்காணிப்பில் அங்குள்ள சேவகர்கள் செய்து வருகின்றனர் எலக்ட்ரானிக் பொருட்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குட்பட்ட திருப்பதி அலிபிரியில் இருந்து மலைப்பாதை திருமலையில் ட்ரோன் கேமராவில் வீடியோ பதிவு செய்ய பாதுகாப்பு காரணங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தினேஷ் எனும் பக்தர் தனது மனைவியுடன் சுவாமி தரிசனத்திற்கு பிறகு திருப்பதி காரில் செல்லும் வழியில் மலைப்பாதையில் 52-வது வளைவில் மொகல்லா மெட்டு மலையில் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தார். இதனையெடுத்து காரில் சென்ற பக்தர்கள் திருமலை விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விரைந்து அந்த நபரையும் அவரது மனைவியும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்சு திருமலை குறித்த நிபந்தனை கட்டுப்பாடுகள் ஏதும் தெரியாது என்று விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரியானாவை சேர்ந்த தினேஷ் எனும் பக்தர் மலைப்பாதையில் லைட் வைட் நானோ ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அலிபிரி சோதனை சாவடியில் நானோ லைட் வைட் ட்ரோன் என்பதால் அதனை சோதனை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ராணுவ வீரர் என்பதால் இச்செயலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அடிக்கடி நடைபெறுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.