பொங்கலில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை, இதனால் தியதற்கு மக்கள் கூட்டம் செல்லவில்லை. முன்னனி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யும் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். அஜித் விடாமுயற்சி படத்தில் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு இல்லாமல் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக தகவல் வந்தன. இந்த படம் தமிழ் சினிமாவின் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் விஜயின் லியோ படம் எடுத்த பிறகு ரஜினிகாந்திற்கு கதை எழுதி வந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் அவருக்கு அழைப்பு கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. வளர்ந்து வரும் இயக்குனரான லோகேஷ் கமலுடன் ஒரு படத்தை முடித்துள்ளார், விஜயுடனும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் உடன் மட்டுமே வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. தற்போது அந்த வாய்ப்பு கிடைத்தும் சூப்பர் ஸ்டார் அதற்கு நேரம் காலம் கொடுக்காமல் மற்ற இயக்குநர்களி தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளாராம்.
பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சுபேர் ரஜினியின் லைன் அப்பை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அதாவது வேட்டையன் திரைப்படத்தை அடுத்து ரஜினி அடுத்ததாக நெல்சனுடன் ஜெயிலர் 2 படத்தில்தான் நடிக்கிறார் என்றும் அதற்கான ஆலோசனையில்தான் நெல்சன் இப்போது பெங்களூரில் இருக்கும் ரஜினியின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும் கூறினார். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது அதன் காரணமாகவே இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்துள்ளார்களாம். அந்தப் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி இணைவார் என்றும் கூறினார். அதற்கு அடுத்ததாக கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் மாறி செல்வராஜ் அழைத்து ஒரு படம் பண்ணலாம் என கூறினாரனம் இதனால் அவரும் கதையில் கவனம் செலுத்தி வருகிறார்களாம்.
இந்த வரிசையில் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பதால் சற்று வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. சூப்பர் ஸ்டாரிடம் வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய வரம் அதை என அவர் தவிர்த்து வருகிறார் என்பதை லோகேஷ் நினது வருகிறாராம். இதற்கெல்லாம் காரணம் கடைசியாக விஜய் கூட்டணியில் இணைந்த லோகேஷ் கனகராஜ் லியோ படம் கடந்த ஆண்டு வெளியானது. அந்த படம் மக்களிடம் கலவையான விமர்சனம் பெற்று வந்ததால் ரஜினி சிந்தித்து ஓரம் தள்ளிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. லோகேஷும் அடுத்த நடிகரை தேடி செல்வதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்ற.