தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை தாண்டியுள்ளது, பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 104 நாட்களை கடந்து நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சோசலில் மாயா வெற்றிபெறுவார் அவருக்கு தான் கமல்ஹாசன் உறுதுணையாக இருந்து வருகிறாய் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், வெற்றியாளராக விஜே அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தான் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்தபோது வேண்டாம் என பிரதீப் பக்கம் சென்றார். அதனாலேயே பிரதீப் ரசிகர்கள் அர்ச்சனாவை தேர்தெடுத்ததாக சில தகவலும் வருகிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சில போட்டியாளர்கள் ஏவிக்ஷன் மூலம் வெளியேறினர். இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நேற்று ஒளிபரப்பட்டது. கமல் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் இந்த வீட்டில் இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதில் பேசிய பிக்பாஸ் வீடு ஒரு ஜெயிலைப் போன்றது. நம்மை அது பண்படுத்தும். பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட ஒரு நூலகம். நாம் என்ன புத்தகத்தை எடுக்கின்றோம் என்பதைப் பொறுத்து நமது அனுபவம் அமையும் என கூல் சுரேஷ் கூறினார்.
இந்த வீட்டில் இருந்து வெளியில் இருந்து வெளியில் வந்த போது நிறைய விஷயத்தை கற்றுக்கொண்டேன். ஆனால், சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் வந்திருந்தது. உண்மையான அன்பு கிடைத்தது. நமக்காக நாம் சுயநலமில்லாமலும் இருக்க வேண்டும், சுயநலத்துடனும் இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன். சமூகவலைதளங்களில் புரளி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களை நேரில் சந்திக்கும்போது அன்பு செலுத்தினார்கள் என்றார். இதையெல்லாம் கன்ட கமல்ஹாசன் செய்வதெரியாமல் விழி பிதுங்கி நின்றார் என்றே சொல்லலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அந்த நிகழ்ச்சி தொகுத்து வழக்கும் கமல்ஹாசன் மீது பல சசிகாரவு பெற்று வந்தார். அதாவது, இளம் தலைமுறைகளை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி மூலம் தவறான வலிகளுக்கு கொண்டு செல்வதாக விமர்சனம் வந்தது. அதுமட்டுமில்லாமல் அரசியலில் கவனம் செலுத்தும் கமல் எதற்கு இந்த போட்டியில் இவர் கலந்துகொண்டு அவப்பெயர் வாங்குகிறார் என்ற விமர்சனம் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தற்போது அந்த போட்டியில் கலந்துகொண்ட கூல் சுரேஷ் அது ஒரு ஜெயில் என சொல்லியது மேலும் கமலுக்கு வேதனை அளித்துவிட்டதாக தகவல் கூறுகின்றனர். அடுத்த சீசனில் கமல் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வந்தது ஆனால் நேற்று நடைபெற்ற கடைசி ஒளிபரப்பில் கமல் அது குறித்த எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.