தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக தேர்தலின் போது நாங்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் திமுக தலைமையின் பித்தலாட்டங்கள் வெளி வர தொடங்கியுள்ளன.
திமுக 2021ம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பால்வளத்துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். நாசர் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர் என்ற முறையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது வரவேற்பினை பெற்றது. ஆனால், கடந்த வருடம் அவரின் செய்லபாடுகள் சரியில்லை என்று திமுக தலைமை நாசரின் பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்தது.
அப்போதே, திமுக மீது ஒரு விமர்சனம் வந்தது. இந்த நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த செஞ்சி மஸ்தானை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்து வந்தார். எம்பி ரவிக்குமார் வெற்றியும் பெற்றார். விழுப்புரத்தை பொறுத்தவரையில் அமைச்சர் பொன்முடிக்கும், செஞ்சி மஸ்தானுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அது வெட்ட வெளிச்சமாக வெளியில் வந்துள்ளது.
ஏற்கெனவே, ரம்ஜான் பண்டிகையின் போது நோம்பு திறப்பு விழா விழுப்புரம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி உள்ளே வருவதர்க்கு முன்பே அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச தொடங்கினார், உடனே நிர்வாகி ஒருவர் பொன்முடி வந்து கொடு இருக்கிறார் கொஞ்சம் பேச்சை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதனை மதிக்காமல் செஞ்சி மஸ்தான் பேசிக்கொண்டு இருக்க உடனே கோவப்பட்ட பொன்முடி பேசியது போதும் உட்க்காரு என்பது போல் எழுந்து செஞ்சி மஸ்தான் கையில் இருந்த மைக்கை வெடுக்கென்று பிடுங்கினார். அதுமட்டுமில்லாமல் செஞ்சி மஸ்தானை மேடையிலேயே திட்டியுள்ளார் பொன்முடி.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக திமுக தலைமை இருவரையும் கூட்டி சமாதானமும் செய்யவில்லை பொன்முடிக்கு எந்த வித கனடிஷனும் போடவில்லை இது பேசு பொருளாக மாறியது இது தான் சிறுபான்மையினருக்கு திமுக கொடுக்கும் மரியாதையா என கேள்வி எழுந்தது. அதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டுள்ளது திமுக.
திமுக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சீகாமணி பெயர் அடிபட்ட நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் மறைந்த புகழேந்தி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார் அந்த இடத்திற்கு கௌதம சீகாமணியை நியமனம் செய்தது மட்டுமில்லாமல், வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பொறுப்பாளராக பா.சேகர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த விவகாரம் விழுப்புரம் மட்டுமல்லாது தமிழக அளவில் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், பலரும் கருத்து தெரிவிப்பது ஓட்டுக்காக மட்டுமே சிறூபான்மையினரை திமுக பயன்படுத்துகிறது தேர்தல் முடிந்தவுடன் தனது வேலையை காட்டுகிறது என்கின்றனர். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை பொறுத்தவரையில் பொன்முடியின் ஆட்டம் அதிகரித்துள்ளே செஞ்சி மஸ்தான் ஒவ்வொன்றாக திமுகவில் இழந்து வருகிறார் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.