கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் உண்மையான பெயர் சாய்னா சந்தோஷ். முதலில் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்க அதில் பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்ததால் தமிழ் திரை உலகம் பக்கம் தாவினர். தமிழில் முதல்முறையாக நெடுநல்வாடை என்ற திரைப்படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அதன் இயக்குனர் செல்வகண்ணனால் தான் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. எனவே அந்த படத்தில் இருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். பிறகு அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி படத்தில் அபி சரவணன் உடன் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் அதிதி தன்னை காதலிப்பதாக திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றியதாக பரபரப்பு ஏற்படுத்தினார் அபி சரவணன்.
ஆனால் அபியை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினார் அதித்தி. இது குறித்து அபி புகார் அளித்து மேலும் நீதிமன்றம் அதித்தியை ஆஜராக சொல்லியும் இன்னும் ஆஜர் ஆகாமல் இருக்கின்றார். பின்னர் அதிதி மேனன் மிர்னா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டு தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பிரபல நடிகரான ரஜினிகாந்துடன் இணைந்து ஜெய்லர் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு மருமகளாக நடித்துள்ளார். இந்த ஜெய்லர் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்னர் ஆனந்தம் என்ற வெப் சீரியஸில் நடித்துள்ளார். பிக் பிரதர் என்னும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதுபோக தற்போது புர்கா தமிழ் திரைப்படத்தின் ஷூட்டிங் மிகவும் பிசியாக இருக்கின்றார். இதுபோன்று தமிழ் மற்றும் மலையாள சினிமாக்கள் மட்டுமல்லாமல் கிரேசி செல்லோ மற்றும் முக்ரம் என்னும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இது போன்று பல முயற்சிகள் மேற்கொண்டு சினிமாவில் ஆர்வம் இருப்பதினால் பல தடைகளை தாண்டி ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து பெரும் வெற்றியினை அந்த திரைப்படத்தின் மூலம் கண்டுள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு இவர் மிகவும் பிரபலமாகவும் ஆகினார். இது போன்று இன்னும் பல பிரபலங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார்!! அந்தவகையில் தற்போது மிர்ணா மேனன் தனது உடல் நிலையை சரியாக வைத்துக் கொள்வதற்கு பயிற்சிகள் பல எடுத்து வருகிறார். இவர் எடுத்து வரும் பயிற்சிகளில் அடங்கிய வீடியோ இணையத்தில் இப்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதில் இவர் ஜிம் போன்ற இடத்தில் மிகவும் விறுவிறுப்பாக உடற்பயிற்சி செய்வது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. இதனைப் பார்க்கும்போது அவர் அடுத்த திரைப்படத்தில் ஏதாவது ஒரு போலீஸ் கெட்டப்பில் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்!! ஆனால் அப்படி எந்த ஒரு படம் வரப்போவதாக எந்த தகவலும் வெளியே வரவில்லை. ஆனாலும் இவர் செய்யும் உடற்பயிற்சிகளை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது மிகவும் சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகளையும், திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் சண்டை இடுவதற்கு பல ஸ்டேன்டுகளையும் செய்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வது போல அந்த வீடியோவில் பயிற்சி எடுத்து உள்ளார். அதனால் இவர் அடுத்து ஒரு பெரிய ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பாரோ?? முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பாரோ என்ற பல கமெண்ட்ஸ்கள் இணையத்தில் எழுந்து வருகிறது!! இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!