கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து மக்களிடமே மோசடி செய்து பணம் பெற்ற விவகாரத்தில் கடந்த வருடத்தில் கைது செய்யப்பட்டார். இவர் அப்பொழுது கைது செய்யப்பட்டதே பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறையின் அமைச்சராக இருந்த பொழுது அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலேயே பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுவதாக எழுத குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது அடுத்து இவர் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளும் வலுவெடுத்ததை அடுத்து வருமான வரி துறை மற்றும் அமலாக்கத்துறை இவரனை கைது செய்து விசாரணையை தொடங்கியது. இருப்பினும் அவரது அமைச்சர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்படவில்லை..
இதுவரை எந்த ஒரு மாநில அரசும் ஒரு குற்றவாளிக்கு செய்து விடாத பல சலுகைகளை இந்த திமுக அரசு செய்து செந்தில் பாலாஜிக்கு வந்தது, பொறுப்பில்லாமல் அமைச்சர் பதவி வேலை பார்க்காமல் சம்பளம் என தனது கண்ணின் மணியை போல செந்தில் பாலாஜி கவனித்து வந்த திமுக தொடர் விமர்சனங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்த காரணத்தினால் செந்தில் பாலாஜியை கண்டு கொள்ளாமல் இருக்க செந்தில் பாலாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு பின்னால் திமுக தான் இருக்கிறது என்ற வகையிலான பேச்சுக்களும் அரசியல் வட்டாரங்களில் நிலவியது. ஆனால் இன்று வரையிலும் இவர் மீதான குற்றச்சாட்டினை அமலாக்கத்துறை விசாரித்து தான் வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியும் தொடர்ந்து ஜாமீன் வாங்குவதற்காக எல்லா நீதிமன்றங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனால் எந்த நீதிமன்றத்திலும் இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும் இதுவரை இவரின் ஜாமின் விசாரணையானது பத்து முறைக்கு மேலும் சென்றுவிட்டது.
மேலும் பல முயற்சிகள் செய்தும் ஜாமின் கிடைக்காமல் இன்றும் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்போது விடுதலை கிடைக்கும் என்று தெரியாமல் இருந்து வருகிறார்.இந்த நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டே அரசியலுக்காக வேலை பார்த்துக் கொண்டு உள்ளார் என்று அண்ணாமலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது 2019 மற்றும் 2021 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவிற்காக செந்தில் பாலாஜி அயராது உழைத்து கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் நல்லபடியாக வாக்குகள் சேகரித்து திமுகவிற்கு முழு பக்க பலமாக இருந்து வந்தார். மேலும் பல வேட்பாளர்களுக்காக இவரே களமிறங்கி பேசி வருவார். இவ்வாறு திமுகவிற்கு பக்கபலமாக இருந்து வந்த பாலாஜி தற்போது ஜெயிலிலும் உள்ளார். மேலும் திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் மக்களும் கடும் எதிர்ப்பிலிருந்து ஓட்டு சேகரிக்க எந்த தொகுதிக்கு போனாலும் விரட்டி வருகின்றனர்.
இதனால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியிடம் திமுக உதவி கேட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியும் இதற்கு உதவிவே டி.ஆர்.பி.ராஜா மூலம் செய்து கொண்டு இருக்கிறார் என்று தற்போது அண்ணாமலை கூறி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும். பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பல மாதங்களாக நீடிக்கும் செந்தில் பாலாஜியின் வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை காப்பாற்றும் முயற்சியை திமுக கைவிட்டு இருந்தது ஆனால் தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கான எதிர்ப்பை நேராக எதிர்கொண்ட திமுக செந்தில் பாலாஜியின் உதவியை ரகசியமாக நாடி உள்ளதும் செந்தில் பாலாஜியும் ரகசியமாக பல உதவிகளை டிஆர்பி ராஜா மூலம் செய்து வருவது அம்பலமாகியுள்ளது, இது குறித்து விசாரிக்கும் பொழுது செந்தில் பாலாஜி அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகிறது!!