ராமேஸ்வரம் கஃபே என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி தோசை உடன் கூடிய பில்டர் காபி என காலை சிற்றுண்டி மதிய உணவு இரவு உணவு போன்றவற்றை விற்பனை செய்யும் ஒரு உணவகம். பல மாநிலங்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த உணவகத்தின் உணவிற்கு பலர் அடிமையாகி உள்ளனர். இங்கு கிடைக்கும் தரமான உணவு மற்றும் சுவையான உணவிற்காக பலர் ராமேஸ்வரம் கதையை தேடி வந்து உண்டு செல்லும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வந்த ராமேஸ்வரம் கஃபேவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கிளையின் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வெடிகுண்டு வெடித்தது.
இதில் உணவகத்தில் இருந்த பணியாளர்கள் மற்றும் சில பொதுமக்கள் என பத்து பேர் காயமடைந்தனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் பொதுவாக இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் குண்டுவெடிப்பு விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் நடைபெற்ற வழக்கம் உள்ளது. ஆனால் பெங்களூருவில் நடந்த சம்பவமோ ஒரு உணவகத்தில்! அதிலும் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த இடப்பகுதியில் அமைந்திருந்த ராமேஸ்வரம் கஃபேவில் அதிக மென்பொருள் பணியாளர்கள் மதிய வேளையில் அங்கு வந்து உணவு அருந்தி கொண்டிருந்த நேரத்தில் வெடித்துள்ளது திட்டமிட்ட சதியாகவும் பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை என் ஐ ஏ எனப்படுகின்ற தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, அதாவது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என்றும் பல வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஷிவமொகாவில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக இருந்தவர்களில் ஒருவரான ஷாரிக் என்பவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர்கள் திடீரென்று ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதன் மூலம் வெளிநாட்டு நிதி உதவி இவர்களுக்கு கிடைத்திருக்கலாம் என்றும் கிரிப்டோ கரன்சி மூலம் இவர்கள் நிதியை பெற்றிருக்கலாம் என்றும் தேசிய பிறனாய்வு முகமை தரப்பில் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத குழுவினர்தான் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தேர்வு செய்து இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்துவார்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் குறித்த சில தகவல்கள் மற்றும் அவ்வப்போது செய்திகளில் வெளியாகிக் கொண்டிருந்தது மேலும் அவர்களின் புகைப்படத்தை பொதுவெளியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து மக்கள் மத்தியில் அதிகாரிகள் வெளியிட்டு இந்த விவகாரத்தில் முழுவீச்சில் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 18 இடங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமடைந்த பொழுது கொல்கத்தாவில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காந்தி என்ற சிறிய நகரத்தில் ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாஷேப் மற்றும் தாஹா ஆகிய இருவரையும் அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்தனர்.
இதனை அடுத்து அவர்களிடம் என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்ட பொழுது அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகும் அந்த சம்பவத்திற்கு முன்பும் தனது பெயர் இனம் என அனைத்தையும் மாற்றி தன்னை ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவராக போலி ஆவணங்களை தயார் செய்து அந்த பெயரில் வாழ்ந்து அதற்கு பிறகு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இன்னும் எத்தனை பேர் இது போன்ற போலியான ஆவணங்களை உருவாக்கி பொதுமக்களிடையே வாழ்ந்து வருகின்றனர் என்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கூறியுள்ளதாகவும் இவர்களை தொடர்ந்து இன்னும் பல பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படவுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.