பா.ரஞ்சித் இயக்குனராக ஆகுவதற்கு முன்னர் லிங்குசாமி அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து வந்தார். அதன் பின் வெங்கட் பிரபுவிடம் அசிஸ்டன்ட் டைரக்டராகவும் பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்னும் காதல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தினை முதல் முதலில் இயக்கினார். இந்தத் திரைப்படம் காமெடியாகவும் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் சூப்பராக திரையரங்குகளில் ஓடி வந்தது. இந்த நிலையில் ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தி சூப்பர் ஹிட் ஆக வெற்றி தந்த நிலையில் அடுத்தடுத்து இவர் படம் இயக்குவதில் தனது பணியை தொடர்ந்தார். மேலும் அவருக்கு பல ஹீரோக்களிடமிருந்து சில வாய்ப்புகளும் கிடைத்தது.
அதன் பிறகு கார்த்தி நடிப்பில் 2014 ல் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி இந்த திரைப்படம் வெளிவந்தது. இதுவும் நல்ல அளவில் வசூல்களை பெற்றது. இப்படி இரண்டாவது படமும் நன்றாக போடி வெற்றி பெற்ற நிலையில் ரஞ்சித் அவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதலில் எடுத்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்ததால் அடுத்ததாக மூன்றாவது எடுக்கப் போகும் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதேபோல 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில் கபாலி என்னும் திரைப்படத்தை இயக்கி அதனை வெளியிட்டார். ரஞ்சித்தின் முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்ததால் அவரின் ரசிகர்கள் ஆர்வமாக இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருந்தனர். மேலும் ஏற்கனவே ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களும் மிகவும் ஆர்வமாக ரஞ்சித்தின் முதல் இரண்டு திரைப்படங்களை பார்த்துவிட்டு மூன்றாவதாக சூப்பர் ஸ்டாரை வைத்து எடுத்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கபாலி திரைப்படம் 100 கோடி செலவில் இயக்கி வெளியிடப்பட்டது. முதலில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் பொழுதே அதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகமாக படத்தினை காண சென்றனர். அதேபோல அந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. மேலும் அந்த திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் டயலாக்குகள் சில சூப்பராக அமைந்திருந்ததால் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படமும் வெற்றி பெற ரஞ்சித் அவர்கள் மீண்டும் தனது நான்காவது திரைப்படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி விட வேண்டும் என்று நினைத்தார். 2016 ஆம் ஆண்டு நினைத்ததைப் போலவே காலா என்னும் திரைப்படத்தை ரஜினிகாந்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இந்த திரைப்படம் நினைத்தபடி வெற்றி பெறவில்லை. மேலும் இந்த திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிசும் அந்த அளவிற்கு கலெக்ஷனை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது பா.ரஞ்சித் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது அதன் தொகுப்பாளர் ரஞ்சித்தை நோக்கி நீங்கள் எடுத்த எல்லா திரைப்படம் வெற்றி பெற்று வந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து எடுத்த 2 திரைப்படமும் வெற்றி பெறாமல் போனது இதற்கு காரணம் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் கதையை புரிந்து கொள்ளாமல் இருந்தாரா??என்று கேள்வி எழுப்பிள்ளார்!! அதற்கு பா ரஞ்சித் அவர்கள் எந்த ஒரு பதிலும் கூறாமல் சிரித்து அந்த கேள்வியை மழுப்பினார். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது, மேலும் இப்படி ரஞ்சித்துக்கு புகழை தேடி தந்த ரஜினியை முதுகில் கட்டும் வகையில் இந்த சிரிப்பு அமைந்திருக்கிறது என்றும், ரஜினி புரியாமல் ஒன்றும் நடிக்கவில்லை என்றும் பல பதிவுகள் எழுந்து வருகிறது!! தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது!!