24 special

எடப்பாடிக்கு இடியாய் விழுந்த செய்தி என்ன நடக்கப்போகிறது ஈரோடு கிழக்கில்..!

Edappadi palanisamy ,stalin
Edappadi palanisamy ,stalin

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவை எதிர்த்து பலம் பொருந்திய வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று பாஜக வலியிறுத்தி வந்தது அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நபருக்கே தங்கள் ஆதரவு என அண்ணாமலை குறிப்பிட்டு வந்தார்.


பாஜக தேசிய செயலாளர் CT ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வதிற்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பன்னீர் செல்வமும் அவரது தரப்பு வேட்பாளரை வாபஸ் வாங்கினார். இதன் மூலம் இரட்டை இலை என்ற ஒன்றுதான் திமுக கூட்டணியில் உள்ள பலம் பொருந்திய காங்கிரஸ் வேட்பாளரை எதிர் கொள்வது என்பது தெளிவாகி இருக்கிறது.

TTV தினகரனும் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கி இருக்கும் சூழலில், முழுக்க முழுக்க ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்தலை எதிர்கொள்ளும் முதல் தேர்தல், இரட்டை தலைமை தான் பல்வேறு குளறு படிகளுக்கு காரணம் என்று கூறிவந்த எடப்பாடி தரப்பு இந்த தேர்தலில் முழுக்க முழுக்க தங்கள் சொந்த பலத்தில் களம் இறங்கி இருக்கிறது.



இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் என்பதும் பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்றாலும் இரட்டை இலை உடன் தேர்தலை சந்திக்க இருக்கிறார் எடப்பாடி... அவரது வேட்பாளர் 5-10 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அது நிச்சயம் எடப்பாடிக்கு பெரிய பின்னடவை தராது...!



அதே நேரத்தில் இரட்டை இலை டெபாசிட் இழந்தால் நிச்சயம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை கேள்வி குறியாகும் ஏன் என்றால் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவின் அடிப்படையில் மட்டுமே இடை தேர்தலை எதிர்கொண்டார்கள் அதுவும் கொங்கு பகுதியில் நடந்த இடை தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் டெபாசிட் இழந்தார் என்றால்... மாநிலத்தின் மற்ற பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு என்ன என்ற கேள்வி எழும்?



இது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருப்பதால் முழுக்க முழுக்க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என பலரை களத்தில் இறக்கி போதுமான அளவு விட்டமின் "பா" செலுத்துவதும் உத்தரவு போட்டு இருக்கிறாராம்.



ஆனால் ஆளும் கட்சியின் அதிகாரத்தை மீறி என்ன செய்வது என கையை பிசைந்து வருகிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள் இதற்கு இடையே அதிருப்தியில் இருக்கின்ற அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் தொடங்கி வார்டு மெம்பர் வரை கச்சிதமாக தங்கம் பக்கம் இழுத்து தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறதாம் ஆளும் திமுக காங்கிரஸ் கூட்டணி.



இதே வேலையில் ஒரு வேலை நாம் தமிழர் கட்சி அதிமுகவிற்கு சற்று ஏற குறைய வாக்குகள் மட்டும் பெற்று விட்டால் நிச்சயம் எடப்பாடியார் அரசியல் வாழ்க்கை இடை தேர்தலில் கேள்வி குறியாக்கும் என்பதால் என்ன நடக்க போகிறதோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு...