24 special

இந்த மனுஷனுக்குள்ள இப்படி ஒரு பக்தியா...?

ACTOR SENTHIL
ACTOR SENTHIL

திருவெற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலையானது கால் நீட்டி மல்லாந்து வாய் திறந்து நிலையில் பிரசவ காலத்தில் துடிக்கும் பெண்ணை போல காட்சி அளிக்கின்றார். இதனாலே இங்கு குழந்தை இல்லாதவர்கள் அதிகமாக வழிபட்டு சென்று தங்கள் வாழ்வில் குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். அம்மனுக்குப் பின்புறம் உள்ள கருவறையில் விநாயகர், தண்டவராயன் என்று அழைக்கப்படும் நடராஜன், அங்காள பரமேஸ்வரி ஆகியோர் உள்ளனர். மேலும் எதிரில் நந்தி வாகனமும் உள்ளது. இந்தக் கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் பெரிய மாற்றங்களும் நல்ல விஷயங்களும் நிகழும் மேலும் அடிக்கடி இந்த கோவிலுக்கு வர நினைப்பர். மேலும்  திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலில் வந்து  அம்மனை வழிபட்டு சென்றால்  அவர்களின் திருமண தடை நீங்கி மனதிற்குப் பிடித்தவர்களுடன்  திருமணம் நடக்கும்.


வீடுகளில் எப்போது பார்த்தாலும் பிரச்சனையை நடந்து கொண்டுள்ள நிலையில் இந்த கோவிலுக்கு வந்து சேலை முந்தானையில் சிறிது ஓரத்தில் கிழித்து இந்த கோவிலில் வெளியே உள்ள மண்புற்று அருகே இருக்கும்  இருக்கும் வேப்ப மரத்தில் அந்தத் துணியை கட்டி சென்றால் அவர்களின் வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர்.இவ்வாறு செய்து அந்தப் பிரச்சனை சரியாகி விட்டால் வேண்டி சென்றவர்கள் திரும்பி வந்து அம்மனுக்கு நன்றி சொல்லி பிரார்த்தனை செய்து செல்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.இந்தக் கோவிலுக்குள் நுழைந்தவுடன் நம்மிடம் உள்ள கெட்ட விஷயங்கள் அனைத்தும் நம்மை விட்டு செல்வதை உணர முடியும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மஞ்சள் குங்குமம்  வாசனை நம்மளுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. கோவில் அதிகமாக பெண்கள் வந்து செல்லும் கோவிலாக உள்ளது. அவர்களின் வேண்டுதல்களை அம்மன் நடத்தி தர வேண்டும் என்று அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அவர்களின் முந்தானையின் ஓரத்தினை அம்மன் காலடியில் வைத்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

அம்மனின் பாதத்திடம் வைத்த எலுமிச்சை பழம் உருண்டு இவர்களின் முந்தானையில் வந்து விழுந்தால் இவர்கள் நினைத்த காரியம் நடக்கும் என்று அங்கு செல்லும் அனைவராலும் சொல்லப்படுகிறது. மேலும் இங்கு சிவராத்திரி கொண்டாடப்படும், மேலும் மாசி மகத்தன்று இங்கு நடக்கும் மயான கொள்ளை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது. இந்த மயான கொள்ளை அன்று அதிக அளவில் மக்கள் கூட்டம் இந்த கோவிலுக்கு வருவர்.ஆடி வெள்ளி, அமாவாசை சிறப்பு பூஜை நடக்கும். ஆனால் மற்ற திருவிழாக்களை விட இது நடக்கும் மயான கொள்ளை மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் நடிகர் செந்தில் அவர்களும் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றுள்ளார். தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்த நகைச்சுவை நடிகர் செந்தில் பல படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். மேலும் செந்தில் மற்றும் கவுண்டமணி இருவரும் சேர்ந்து நடித்த பல காமெடிகள் இன்றளவும் எவர்கிரீன் ஆக உள்ளது.

அப்படி மக்களை மகிழ்வித்த செந்தில் தனது வெற்றிக்குப் பின்னால் இந்த அம்மனே உள்ளார் என்று கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மேலும் அவர்,திருவொற்றியூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அவர் அடிக்கடி வருவதாகவும், மேலும் நாளை கோவிலில்  மயான கொள்ளை திருவிழா நடக்க இருப்பதாகவும் அதற்காக முன்கூட்டியே கூட்டங்களை தவிர்த்து அம்மனை வழிபடுவதற்காக வந்தேன். இக்கோவிலில் மசான கொள்ளை மிகவும் சிறப்பாக நடக்கும். இந்தக் கோவிலில் வந்து வழிபடுவதால் என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. நீங்களும் இந்த கோவிலுக்கு வாருங்கள். நானும் அதனை தொடர்ந்து வந்து கொண்டுள்ளேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிறது...