24 special

நன்றி கெட்டவரா விஜய்...? கேப்டன் விஷயத்தில் பொங்கும் ரசிகர்கள்...

actor vijay, vijayakanth
actor vijay, vijayakanth

கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து செயற்கை சுவாசத்தின் உதவியுடன் தற்பொழுது மியாட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அவருக்கு வென்டிலேட்டரை எடுத்துவிட்டால் மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தொண்டையில் துளையிட்டு மூச்சு குழாய் மூலம் அவரது நுரையீரல் பகுதிக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்க வைக்கலாமா அதற்கு சிகிச்சை மேற்கொள்ளலாமா எனவும் வேறு மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விரைவில் மீண்டு வந்து விடுவார் உங்களை எல்லாம் அவர் நேரில் பார்ப்பார் என கூறி தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தொண்டர்களையும் விஜயகாந்த் ரசிகர்களையும் உற்சாகம் ஏற்றி வருகிறார். எந்த நிலையில் விஜய் குறித்த விமர்சனங்கள் இணையதளத்தில் அதிகமாக எழுந்துள்ளது, 1991 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு மூலம் அறிமுகமான நடிகர் விஜய் அப்பொழுது அந்தப் படம் சரியா போகாத காரணத்தினால் அடுத்தடுத்து எந்த படங்கள் செய்ய வேண்டும் என அவருக்கு தெரியவில்லை. குறிப்பாக கூற வேண்டும் என்றால் ரஜினி, விஜயகாந்த் போன்ற ஹீரோக்களுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களால்  கூட விஜய்க்கு பெரிய ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. 

அப்பொழுது அறிமுக நாயகனாக இருந்த விஜய்க்கு ஏதேனும் ஒரு ஹிட் படம் அமைந்தால் அது அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியத்துவமாக இருக்கும் அதற்கு ஏதேனும் ஒரு பெரிய கதாநாயகனுடன் சேர்ந்து விஜய் படம் நடித்தால் நன்றாக இருக்கும் என செந்தூரப்பாண்டி கதையை தேர்வு செய்து வைத்துக்கொண்டு அதற்காக நாயகனை தேடினார். அப்பொழுது அவர் பார்க்காத நாயகர்கள் கிடையாது, கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பெரிய நாயகர்கள் அனைவரையும் பார்த்து விட்டார், ஏன் சத்யராஜ் உட்பட அந்த செந்தூரப்பாண்டி கதாபாத்திரத்திற்கு அவர் கேட்டதாக சில தகவல்கள் உண்டு. 

அப்பொழுது 'சட்டம் ஒரு இருட்டறை' போன்ற பல வெற்றி படங்களை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து இயக்கிய காரணத்தினால் விஜயகாந்த்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மீது ஒரு பெரிய மரியாதை உண்டு என கூறப்படுகிறது. அப்போது விஜயகாந்த் அவர்களை நடிக்க வைக்கலாமே என எஸ்.ஏ.சந்திரசேகரன் மனைவியும் விஜயும் தாயாருமான சோபா கேட்கையில் கேட்டு பார்ப்போம் எனக்கூறி விஜயகாந்த் அவர்களுக்கு எஸ்ஏ சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து உங்களிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். 

உடனே விஜயகாந்த் படப்பிடிப்பில் இருந்தவர் கிளம்பி நேராக விஜய் வீட்டுக்கு வந்து விட்டாராம், என்ன வேண்டும் சொல்லுங்கள் எனக் கேட்ட பொழுது தம்பியை வைத்து ஒரு படம் செய்கிறேன் நீங்கள் ஒரு கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்கும் அதுதான் செந்தூரப்பாண்டி விஜயகாந்த் அண்ணன் கதாபாத்திரம் உடனே எப்பொழுது சூட்டிங் எப்பொழுது சொல்லுங்கள் வருகிறேன் என்றாராம். சொன்னபடியே ஷூட்டிங் வந்தது மட்டுமில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு விஜயகாந்த் சென்றாராம். இவ்வளவுக்கும் அதற்கு பணம் வாங்கிக் கொள்ளவில்லையாம், இப்படி விஜய்க்கு முதல் ஹிட் படம் செந்தூரப்பாண்டி கொடுத்து விஜயின் சினிமா வாழ்க்கை துவங்குவதற்கு பெரிய பிள்ளையார் சுளையாக இருந்த விஜயகாந்த் அவர்களை விஜய் தரப்பு இன்று மதிப்பதில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

குறிப்பாக தற்பொழுது உயிருக்கு போராடும் நிலையில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஏன் அவரை சென்ற விஜய் பார்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயகாந்த் பிறந்தநாள் வந்த பொழுது விஜய் அவர்கள் வாழ்த்து கூறவில்லை, ஆனால் அரசியல் கட்சி துவங்கும் ஆசையில் இருப்பதினால் திருமாவளவன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார் இப்படி விஜய் சுயநலவாதியாக மாறிவிட்டாரே எனவும் இணையத்தில் இணையவாசிகளால் கமெண்ட் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.