திமுக ஆட்சிக்கு வந்த பின் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவப்போது அரசியல் கட்சி தலைவர்கள் குற்ற சாட்டு வைத்தனர். அதுபோலவே தற்போது ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் கடையை திமுக பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர் ரவுடிகளை கொண்டு கடையை உடைத்ததாக உரிமையாளர் பேசும் வீடியோ இணயத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் மனப்பாறையை சேர்ந்த ஆறுமுகம் இவர் அதே பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான, மணப்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஹோட்டலை நடத்தி வருகிறார். ஐந்து வருட ஒப்பந்தத்தின் மூலம் ஹோட்டலுக்கு மாத வாடகை மூலம் செலுத்த ஒப்பந்தம் போட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக வணிக உரிமையாற் ராஜாவிற்கு சரியான முறையில் வாடகை கொடுத்து வந்துள்ளார். ஆனால், ராஜா இந்த வருடம் வாடகையை உயர்த்தி தரும்படி ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு ஆறுமுகம் எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால் எனது உறவினர் தான் கடையை பராமரித்து வருகிறார் என கூறியுள்ளார்.
இதனை ராஜா ஏற்க மறுத்துள்ளார், உடனே ஆறுமுகத்தை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து கடையை உடனே காலி பண்ண சொல்லி கையெழுத்து வாங்கி மிரட்டியுள்ளாராம். அதனை தொடர்ந்து முன்னாள் திமுக நகர செயலாளர் சரவணன் என்பவர் அடியாட்களை ஏவிவிட்டு என்னுடைய கடைக்கு வந்து பொருட்களை வெளியில் போடுவிட்டதாக குற்றச்சாட்டு முன் வைத்து ஆறுமுகம் வருத்தத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து மணப்பாறை காவல் துறை தரப்பு தெரிவிக்கையில், தீபாவளிக்குள் கடையின் பாக்கியை கொடுத்துவிடுவதாக தெரிவித்தார், மேலும் அவர் சொல்வது போல் எந்த வித மிரட்டலும் நடைபெறவில்லை என கூறினார். தன்னை மிரட்டியதாக கூறப்படும் செயல் ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஆறுமுகம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அந்த வீடியோ பதிவிட்டு வருகிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு பொறுப்பேற்ற திமுக இரண்டரை ஆண்டுகளில் பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளதை தினமும் செய்திகளில் வருவதை மக்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹோட்டல் உரிமையாளரை திமுக பிரமுகர் அடியாட்களை கொண்டு அடித்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.