24 special

இதெல்லாம் கட்சியா கடுப்பாகி பாஜகவில் இணைந்த நாம் தமிழர் நிர்வாகி! தென் மாவட்டங்களில் பரபரப்பு!

ponradhakrishnan, mary adlin
ponradhakrishnan, mary adlin

சீமானை ஒருங்கிணைப்பாளராக பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியில் பல இளைஞர்கள் நிர்வாகிகளாக உள்ளனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நாம் தமிழர் கட்சிக்கும் சர்ச்சைக்கும் அதிக பொருத்தம் இருப்பது போன்று ஒவ்வொரு சர்ச்சைகளில் புதிது புதிதாக சிக்கிக் கொள்ளும்.  அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானே ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கி பெரும் பேசுபொருளாக மாறினார், பல விமர்சனங்களை சந்தித்த இவர் சம்மந்தப்பட்ட விவகாரம் தற்பொழுது தணிந்துள்ள நிலையில் மற்றுமொரு சர்ச்சையில் நாம் தமிழர் கட்சி சிக்கியுள்ளது. முன்னதாக நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகியான மேரி என்பவர் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தார், சமூக வலைதளத்தில் படு ஆக்டிவ்வாக இருக்கும் மேரி அட்லி நாம் தமிழர் கட்சிக்கு சாதகமான வீடியோக்களை பதிவிட்டு மற்ற கட்சிகளை எதிர்த்தும் பதிவுகளை இட்டு வருவார்.


சீமானை குறித்து பலவாறு புகழ்ந்து பேசும் நாம் தமிழர் கட்சிக்காக கடுமையாக உழைக்கும் பெண் நிர்வாகி என்ற பெயரை எடுத்த மேரி அட்லின் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் நான் மேரி அட்லின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளராக இருந்த நான், கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி உள்ளிட்டு பல பல பகுதிகளில் நான் பேசிய வீடியோ ஒன்று அதிகமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் நாம் தமிழர் கட்சியின் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கும் ஒரு பெண் குமுறல் என்று பல வீடியோக்கள் பதியப்படுகிறது! ஆனால் இங்கு எந்த குமுறலும் கிடையாது எந்த பிரச்சினையும் கிடையாது! இந்தத் திருட்டு திராவிட கழக கட்சியினரோ! காங்கிரஸ் கட்சியினரோ புரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்னன்னா ஒரு குடும்பத்திலேயே ஆயிரம் சிக்கல்கள் கருத்து முரண்கள் இருக்கும், கணவர், மனைவி, பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளும் எல்லா இடங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். 

அப்படி இருக்கும் பொழுது ஒரு அரசியல் தளத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒரு கட்சி வளர்ந்து வரும் கட்சி என்ற பொழுது அங்கும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்! அப்படிப்பட்ட சிக்கல்கள் எதார்த்தமாகவே இருக்கும். அதனை எங்கள் நிர்வாகிகள் சார்ந்து நாங்களே பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் நான் பேசிய சில வீடியோக்களின் சில குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் எடுத்து வேறு விதமாக பதிவிடுகிறார்கள் நான் பேசிய முழு வீடியோ பதிவும் எங்குமே வெளியாக படவில்லை! முழு காணொளியை நீங்கள் கேட்டால்தான் முழு கதை என்ன என்பது உங்களுக்கு புரியும்! அதனால் சிக்கல்கள் எல்லா இடத்திலும் இருக்கும் அதை நாங்களே பேசி சரி செய்து கொள்கிறோம் என்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டதோடு, மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்த மகிழ்ச்சியான தருணம் என்ற ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். 

அதாவது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள மேரி அட்லின் அதற்கான காரணத்தையும் வீடியோ பதிவாக வெளியிட்டு பாஜகவின் இணைந்ததை தெரிவித்துள்ளார். இப்படி நாம் தமிழர் கட்சியிலிருந்து பெண்கள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருவதும் அதனால் பெண் நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகி வருவதும் அதிகமாகி வருவதால் நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவோ என்ற விமர்சனமும் தற்பொழுது எழுந்துள்ளது.