
தமிழ் சினிமாவில் இயக்குனர்களை குறை சொல்லி வந்த நிலையில் இப்போது அவர்கள் எல்லாம் சினிமாவை விட்டு வெளியே சென்று விடலாம் என பேசும் அளவிற்கு இயக்குனர்கள் படத்தை எடுத்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்றவர்களை பிரபல ஆலங்குடி வெள்ளைச்சாமி கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் இயக்குனர் நெல்சன் எடுக்கும் படங்கள் எல்லாம் சிலை கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற படங்களை மையமாக வைத்து எடுத்து வருகிறார். இளம் தலைமுறைகளை கெடுப்பதாகவும் குட்ட சட்டு எழுந்தது. மேலும், லோகேஷ் கனகராஜ் அவரும் படம் எடுப்பதில் ரத்தம், கொலை போன்ற காட்சிகள் இடம் பிடித்து மக்களை குற்ற செயல்களில் ஈடுபடுவதாக விமர்சனம் தொடங்கியது. இதனாலேயே 10 படங்களுக்கு மேல் இயக்கமாட்டேன் என தெரிவித்தார். தனியார் துறையில் வேலை செய்து வந்த நபர்கள் எதற்காக இது போன்ற படத்தில் கவனம் செலுத்துகிறார் என விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தமிழ்த்திரை உலகம் முழுக்க முழுக்க கஞ்சா, போதை பொருள் சார்ந்தே படங்கள் வந்த வண்ணம் உள்ளது. இன்றைக்கு பல பள்ளி மாணவர்களையே இந்தப் போதை பொருள்கள் ஆக்கிரமித்து வருகிறது. பைட் கிளப், விக்ரம், கைதி என லோகேஷ் கனகராஜின் பல படங்கள் போதைப் பொருள்கள் சார்ந்தே எடுக்கப்பட்டுள்ளது.நெல்சன், அப்பாஸ் போன்ற இயக்குனர்களின் படங்களும் முழுக்க முழுக்க வன்முறை, போதை என போய்க்கொண்டு இருக்கிறது. சமூகத்தை சீரழிக்கிற படைப்புகள், வில்லத்தனம் பண்ணும் ஹீரோ என சினிமா எதை நோக்கிப் போகிறது என்று தெரியவில்லை. லோகேஷ், நெல்சன் போன்ற டைரக்டர்கள் எல்லாம் இலக்கியத்தைப் படிக்கணும். அதைக் கூட படிக்க வேண்டாம். முன்னாடி கலைஞர்கள் எப்படி இருந்தாங்கன்னு பார்க்கணும்.
நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிப் படிங்க. அவர் நடிப்பையே விட்டு விட்டாராம். ஏன்னா எமன் வேடம் போட்டு நாடகத்தில் நடிப்பாராம். அப்போது கர்ப்பிணிகள், மனம் பலவீனமானவர்கள், குழந்தைகள் இருந்தால் அந்த நாடகத்தைப் பார்க்காதீங்கன்னு அறிவிப்பாங்களாம். அப்படி ஒருமுறை வேடம் போட்டு நடித்த போது ஒரு பெண்ணோட கர்ப்பமே கலைந்து போனதாம். இதைக் கேள்விப்பட்டதும் அன்று முதல் அப்படிப்பட்ட நாடகங்களில் நடிக்கவே மாட்டாராம். அதன்பிறகு அவர் நாடகமே எழுத ஆரம்பித்தாராம். அரியலூர் மணி என்பவர் இலங்கைத் தமிழர் பிரச்சனையை பாடல் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துள்ளார்கள். அவர்கள் மனிதர்களா? இது மாதிரி இயக்குனர்கள் மனிதர்களா… இனியாவது இவர்கள் மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.